×

துபாயில் 34 ஆம் ஆண்டின் முத்தமிழ் சங்க நிகழ்ச்சி கோலாகலம்

துபாய்: 34 ஆம் ஆண்டில் முத்தமிழ் சங்கம் கோலாகலம் நிறைந்த கொண்டாட்டம் கே ஆர் ஜி நிறுவனர் மரியாதைக்குரிய கண்ணன் ரவி அவர்கள் பெருமையுடன் வழங்கிய தொழிலாளர்கள் தின கொண்டாட்டம் மே ஐந்தாம் தேதி மாலை வேலை மக்கள் கூட்டம் நிரம்ப கே ஆர் ஜி மற்றும் பராக் ரெஸ்டாரன்ட் இவற்றின் நிறுவனர் கண்ணன் ரவி அவர்களின் முன்னிலையில் முத்தமிழ் சங்கத்தின் சேர்மன் ராமச்சந்திரன் அவர்களின் தலைமையில் தலைவர் ஷா அவர்களின் மேற்பார்வையில் துணைத் தலைவர் பிரசாத் குமார் செயலாளர் சுரேஷ் குமார் கௌரவச் செயலாளர் மணியரசு சாகுல் ஹமீது பி ஆர் ஓ பாளையங்கோட்டை ரமேஷ் கள்ளக்குறிச்சி சின்னா, பொடையூர் தங்கதுரை, எப்சன் பாலா, சக்கரவர்த்தி மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்களின் ஒருங்கிணைப்பில் மாபெரும் நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் விஜய் டிவி புகழ் மைனா ,இசை அமைப்பாளர் பாடகர் துரைராஜ் ,நாட்டுப்புற பாடல்களைப் பாடும் கரிசல் கலை முருகன், பாடகி வர்ஷா, மேஜிக் நிபுணர் விக்கி இவர்களோடு பாடகி மிருதுளா ரமேஷ் ,பாடகர் கோகுல் பிரசாத் தர்ஷன், சமிக்ஷா மற்றும் கேகே நடன குழுவினரின் நடனம் என மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை நடந்த இந்த நிகழ்ச்சியிலே தமிழக தொழில் அதிபர்களான சந்திரசேகர் நாடார், ஹாபித் ஜுனைட் ,எஸ் எஸ் மீரான், டாக்டர் யூசுப் அலி போன்றவர்களும் ஈமான் அமைப்பு யாசின் அவர்களோடு நிர்வாகிகளும் , கேப்டன் டிவி கமல் கே வி எல், வணக்கம் பாரதம் என்ன ஜிம் மறைக்கார், துபாய் தர்பார் கபீர் மற்றும் குழுவினர், youtube, tiktok பிரபலங்களும் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் மக்கள் முன்னிலையில் உழைப்பால் உயர்ந்த உன்னத மனிதர் கண்ணன் ரவி அவர்களுக்கு பாராட்டு விழாவும் நடைபெற்றது.

உலகிலுள்ள அனைத்து தொழிலாளர்களை பாராட்டியும் நடந்த இந்தப் பாராட்டு விழாவினை குறும்பட இயக்குனர் ஆண்ட்ரியா மற்றும் முத்தமிழ் சங்கத்தின் தங்கதுரை இணைந்து தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியை முத்தமிழ் சங்கத்தின் பொதுசெயலாளர் சுரேஷ்குமார் அவர்கள் வந்திருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து இந்த விழாவினை நிறைவு செய்தார்.

The post துபாயில் 34 ஆம் ஆண்டின் முத்தமிழ் சங்க நிகழ்ச்சி கோலாகலம் appeared first on Dinakaran.

Tags : Kolakalam ,annual kissing society show ,Dubai ,KANNAN RAVI ,KRANG ,OF ,DAY ,OF THE DAY OF THE DAY OF THE DAY OF THE DAY OF ,
× RELATED காரை கிராமத்தில் மாரியம்மன் கோயில்...