சென்னை : ராமஜெயம் கொலை, ஜெயக்குமார் கொலையும் ஒரே மாதிரி இருப்பதாக சிறப்பு புலனாய்வுக குழு சந்தேகிக்கிறது. கடந்த மே 4ம் தேதி நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் அவரது சொந்த ஊரில் உள்ள அவரது தோட்டத்தில் வீட்டிற்கு பின்புறம் பாதி உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக காவல்துறையினர் 9 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், ராமஜெயம் கொலை செய்யப்பட்டது போலவே நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரணம் நிகழ்ந்திருப்பதாக காவல்துறையினர் இரண்டு வழக்குகளையும் ஒப்பிட்டுப் பார்த்து வருகிறார்கள்.ராமஜெயம் கொலையில் தொடர்புடையோருக்கு ஜெயக்குமார் கொலையில் தொடர்பு இருக்கலாம் என சிறப்புப் புலனாய்வு குழுவினர் சந்தேகிக்கின்றனர்.
ராமஜெயத்தை போலவே ஜெயக்குமாரையும் கடத்திக் கொலை செய்திருக்கலாம் என்று சிறப்பு புலனாய்வுக குழு போலீஸ் தெரிவித்துள்ளது. அமைச்சர் கே.என். நேருவின் தம்பி ராமஜெயம், கடந்த 2012ம் ஆண்டு மார்ச் மாதம் நடைப்பயிற்சிக்குச் சென்ற போது காரில் கடத்திக்கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் இதுவரை எந்த துப்பும் கிடைக்காத நிலையில், சிபிசிஐடி சிறப்புப் புலனாய்வுத் துறை விசாரணை நடத்தி வருகிறது. ராமஜெயம் கொலை வழக்கையும் ஜெயக்குமார் கொலை வழக்கையும் காவல்துறையினர் ஒப்பிட்டுப் பார்த்து விசாரணையை பல கோணங்களில் தீவிரப்படுத்தி வருகிறார்கள்.
அதாவது, ராமஜெயத்தையும் கொலை செய்து எரிக்க முயன்றுள்ளனர். ஜெயக்குமர் எரிக்கப்பட்டுள்ளார். ராமஜெயத்தின் வாயில் துணியை வைத்து அடைத்து, கை, கால்கள் கட்டப்பட்டிருந்தன. அதுபோலவே ஜெயக்குமார் வாயில் இரும்பு நார் வைக்கப்பட்டு, கை, கால்கள் கட்டப்பட்டிருந்தன. இரு கொலைகளையும் ஒரே கூலிப்படையினர் செய்திருக்கலாமா என்ற கோணத்திலும், இரு கொலைகளிலும் தடயங்கள் எதுவும் கிடைக்காமல் இருப்பதும் காவல்துறையினருக்கு பெரும் சவாலாக மாறியிருக்கிறது.
The post ‘ராமஜெயத்தின் வாயில் துணி.. ஜெயக்குமாரின் வாயில் கம்பி பிரஷ் திணிப்பு : ஒரே கூலிப்படையினர் கொலை செய்திருக்கலாமா? : காவல்துறை விசாரணை!! appeared first on Dinakaran.