- 126வது மலர் கண்காட்சி
- லேசர் லைட் ஷோ
- இரவு
- குசாய் தாவரவியல் பூங்கா
- 126 வது மலர் கண்காட்சி
- உடாக்
- அரச தாவரவியல் பூங்கா
- பெறு
- முதலாவதாக இரவில் லேசர் லைட் ஷோ பிரீமியர்
- தின மலர்
உதகை: உதகை தாவரவியல் பூங்காவில் இரவில் முதல் முறையாக நடத்தப்பட்ட லேசர் லைட் ஷோ சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. கோடை சீசனை முன்னிட்டு உதகையில் 126வது மலர் கண்காட்சி தொடங்கியுள்ளது. அரசு தாவரவியல் பூங்காவிற்கு வரும் சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசிப்பதற்காக 1 லட்சத்து 20 ஆயிரம் மலர்களை கொண்டு டிஸ்னி வேர்ல்ட் முகப்பு அமைக்கப்பட்டுள்ளது . அதே போல 80 ஆயிரம் மலர்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ள உதகை மலை ரயில் அலங்காரம் மற்றும் 35 ஆயிரம் மலர் தொட்டிகள் கண்களுக்கு விருந்தாக அமைக்கப்பட்டுள்ளன.
இதை சுற்றுலாப்பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்துவரும் நிலையில் இரவில் பூங்காவில் உள்ள மரங்கள், பழமையான கட்டிடங்கள், ஆகியவை மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இதனால் பூங்கா மின்னொளியில் ரம்யமாக காட்சியளிக்கிறது. இந்த ஆண்டு சிறப்பு அம்சமாக இரவு 7 மனை முதல் 9 மணி வரை புல்வெளியில் லேசர் லைட் ஷோ நடத்தப்பட்டது. லேசர் லைட் மூலம் சுதந்தர போராட்ட தலைவர்கள் தத்துரூபமாக காட்டப்பட்டனர். அதை தொடர்ந்து பல வண்ணங்களில் 3டி வடிவிலான லேசர் ஒளி மூலம் வர்ணஜாலம் காட்டப்பட்டது. இதை பார்த்து குழந்தைகள் உற்சாகமடைந்து நடனமாடி மகிழ்ந்தனர். முன்னதாக கண்காட்சியை தொடங்கிவைத்த தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உதகை வருபவர்கள் செல்போன் மூலம் இ-பாஸை 2 நிமிடங்களிலேயே பெற்றுக்கொள்ளலாம் என்று கூறினார்.
The post உதகையில் களைகட்டும் 126-வது மலர் கண்காட்சி: முதன்முறையாக இரவில் லேசர் லைட் ஷோ அரங்கேற்றம் appeared first on Dinakaran.