×
Saravana Stores

பாலஸ்தீனத்தை உறுப்பு நாடாக அங்கீகரிக்க வேண்டி ஐநா பாதுகாப்புக் கவுன்சிலை மீண்டும் பரிசீலிக்கக் கோரும் தீர்மானம் ஐநா பொதுச் சபையில் நிறைவேறியது!

பாலஸ்தீனத்தை உறுப்பு நாடாக அங்கீகரிக்க வேண்டி ஐநா பாதுகாப்பு கவுன்சிலை மீண்டும் பரிசீலிக்க கோரும் தீர்மானம் ஐநா பொதுச் சபையில் நிறைவேறியது.

பன்னாட்டு அமைதி மற்றும் பாதுகாப்பினை பராமரிக்க ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை உருவாக்கப்பட்டது. ஐநா விவரித்துள்ளபடி அமைதி காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், பன்னாட்டுத் தடைகள் ஏற்படுத்துதல் மற்றும் ராணுவ நடவடிக்கைகள் எடுக்கும் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த அதிகாரங்களை தனது தீர்மானங்கள் மூலமாக நிலைநாட்டுகிறது. இந்த ஐநா சபையில் 193 நாடுகள் இதுவரை உறுப்பினராக உள்ளது.

பாலஸ்தீனம் ஐக்கிய நாடுகள் அவையில் கடந்த 2012-ம் ஆண்டு முதல் உறுப்பினர் அல்லாத பார்வையாளராக மட்டும் உள்ளது. 193 உறுப்பினர்களை கொண்ட ஐநா சபையில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக அனுமதிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கும் வரைவுத் தீர்மானத்தினை அரபுநாடுகள் கூட்டமைப்பு கொண்டு வந்தது.

பாலஸ்தீனத்தை முழு நேர உறுப்பினராக சேர்க்க 143 நாடுகள் ஆதரவு தெரிவித்து வாக்களித்தன. இந்தியாவும் பாலஸ்தீனத்திற்க்கு ஆதரவாக வாக்களித்தன. இதனை தொடர்ந்து பாலஸ்தீனத்தை உறுப்பு நாடாக அங்கீகரிக்கக் கோரி ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேறியது.

கடந்த மாதம் பாலஸ்தீனத்தை உறுப்புநாடாக அங்கீகரிக்கக் கோரி ஐநா பாதுகாப்புக் கவுன்சில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் அமெரிக்காவின் விட்டோ அதிகாரத்தில் தோல்வியடைந்தது குறிப்பிடத்ததக்கது.

The post பாலஸ்தீனத்தை உறுப்பு நாடாக அங்கீகரிக்க வேண்டி ஐநா பாதுகாப்புக் கவுன்சிலை மீண்டும் பரிசீலிக்கக் கோரும் தீர்மானம் ஐநா பொதுச் சபையில் நிறைவேறியது! appeared first on Dinakaran.

Tags : UN Security Council ,Palestine ,UN General Assembly ,United Nations Security ,Ina ,Dinakaran ,
× RELATED லெபனானின் பால்பெக் நகர மக்கள் வெளியேற இஸ்ரேல் உத்தரவு