- புல்லக் வண்டி எல்காய் ரேஸ்
- Arimalam
- வண்டி எல்கை
- அம்மன் கோவில் மது எடுக்கும் திருவிழா
- கீரணிப்பட்டி முத்துமாரியம்மன்
- கோவில்
- புதுக்கோட்டை மாவட்டம்
திருமயம் : அரிமளம் அருகே அம்மன் கோயில் மது எடுப்பு திருவிழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட மாட்டு வண்டி எல்கை பந்தயத்தில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள கீரணிப்பட்டி முத்துமாரியம்மன் கோயில் மது எடுப்பு திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு கீரணிப்பட்டி ஊர் பொதுமக்கள் சார்பில் மாட்டுவண்டி எல்கைப் பந்தயம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதனிடையே நேற்று காலை நடைபெற்ற பந்தயத்தில் சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, தஞ்சாவூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து 24 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. பந்தயம் பெரிய மாடு, சிறிய மாடு என இரண்டு பிரிவாக நடத்தப்பட்டது.முதலில் நடைபெற்ற பெரிய மாடு பிரிவில் 6 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. பெரிய மாடு போய் வர 8 மைல் தூரமாக பந்தய தூரம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதில் முதல் பரிசை கீரணிப்பட்டி படிக்காசு , 2ம் பரிசு மாவூர் ராமச்சந்திரன், 3ம் பரிசு திருச்சி அன்பில் ஆச்சியப்பன், 4ம் பரிசு பில்லமங்கலம் வாசுதேவன் ஆகியோருக்கு சொந்தமான மாட்டு வண்டிகள் வென்றன.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற சிறிய மாடு பிரிவில் 18 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. இந்நிலையில் அதிக மாட்டு வண்டிகள் கலந்து கொண்டதால் பந்தயம் இரண்டு பிரிவாக நடத்தப்பட்டது. இதில் பந்தய தூரமானது போய்வர 6 மைல் தூரமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதில் முதல் பரிசை மாவூர் ராமச்சந்திரன், கே.புதுப்பட்டி கே.ஏ.அம்பாள், 2ம் பரிசு கீரணிப்பட்டி படிக்காசு, அரிமளம் ஐயப்பன், 3ம் பரிசு விராமதி தையல்நாயகி, நெம்மேனிகாடு ஓம் உடைய அய்யனார், 4ம் பரிசு அரிமளம் சின்னராசு, கே.புதுப்பட்டி விஷ்வா ஆகியோருக்கு சொந்தமான மாட்டு வண்டிகள் வெற்றி பெற்றன.
இறுதியில் பந்தயத்தில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கு கோப்பையுடன் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. பந்தயம் நடைபெற்ற கீரணிப்பட்டி – அரிமளம் சாலை இருபுறமும் திரளான மக்கள் வந்திருந்து பந்தயத்தை கண்டு ரசித்தனர். கே.புதுப்பட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
The post அரிமளம் அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயப்போட்டி appeared first on Dinakaran.