×
Saravana Stores

பொன்னமராவதி முள்ளிப்பாடியில் ஜல்லிக்கட்டு 840 காளைகள் சீறிப்பாய்ந்தன

*300 வீரர்கள் மல்லுக்கட்டு

பொன்னமராவதி : பொன்னமராவதி முள்ளிப்பாடியில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டில் 840 காளைகள் சீறிப்பாய்ந்தன. காளைகளை 300 வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அடுத்த முள்ளிப்பாடி மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடந்தது. இதற்காக புதுகை, திருச்சி, தஞ்சை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள் அழைத்து வரப்பட்டன. காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். இறுதியில் 840 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது.

கோயில் அருகே உள்ள திடலில் காலை 8.30 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டியை இலுப்பூர் ஆர்டிஓ தெய்வநாயகி கொடியசைத்து துவக்கி வைத்தார். முன்னதாக மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். வாடிவாசலில் இருந்து முதலாவதாக கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. பின்னர் ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டன. காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். மக்களவை தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால் ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்கள் மற்றும் பிடிபடாத காளைகளுக்கு பரிசுகள் எதுவும் வழங்கப்படவில்லை. 180 ேபாலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதில் 41 பேர் காயமடைந்தனர்.

The post பொன்னமராவதி முள்ளிப்பாடியில் ஜல்லிக்கட்டு 840 காளைகள் சீறிப்பாய்ந்தன appeared first on Dinakaran.

Tags : Jallikattu ,Ponnamaravathi ,Mullipadi ,Mallukattu ,Ponnamaravati ,Ponnamaravati Mullipadi ,Pudukottai ,Mullipadi Mariyamman temple festival Jallikattu competition ,Ponnamaravathi Mullipadi ,Dinakaran ,
× RELATED பொன்னமராவதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்