×
Saravana Stores

ஊட்டி மலர் கண்காட்சியில் 56 வகையான 400 நாய்கள் பங்கேற்பு

ஊட்டி : சவுத் ஆப் இந்தியா கேனல் கிளப் சாா்பில் 134வது நாய்கள் கண்காட்சி நேற்று ஊட்டியில் துவங்கியது. கீழ் படிதல் மற்றும் அணி வகுப்பு போன்ற போட்டிகளில் நடைபெற்றன. 12ம் தேதி வரை பல்வேறு பிாிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெறுகின்றன. ஊட்டியில் ஒவ்வொரு ஆண்டும் கோடை சீசன் சமயத்தில் நாய் கண்காட்சி மற்றும் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. சவுத் ஆப் இந்தியா கேனல் கிளப் சார்பில் இந்தாண்டு 134, 135வது நாய்கள் கண்காட்சி மற்றும் போட்டிகள் நேற்று ஊட்டி அரசு கலை கல்லூாி மைதானத்தில் துவங்கியது. இதில் கொல்கத்தா, பஞ்சாப், டெல்லி, மும்பை, தமிழ்நாடு, கா்நாடகா, ஆந்திரா உட்பட இந்தியா முழுவதிலும் இருந்து நாய் வளா்ப்போர் தங்களின் நாய்களை போட்டிகளுக்கு அழைத்து வந்தனர்.

இதில் ஜொ்மன் செப்பா்டு, டாபா்மேன், சைபீாியன் ஆஸ்கி, பீகில், பெல்ஜியம் செப்பர்டு மற்றும் தமிழகத்தை சோ்ந்த ராஜபாளையம், கொம்பை, கன்னி, சிப்பிபாறை நாய்கள் என மொத்தம் 56 ரகங்களில் 400 நாய்கள் பங்கேற்றது. முதல் நாளான நேற்று அனைத்து ரக நாய்கள் பங்கேற்ற கீழ்படிதல், அணிவகுப்பு ஆகிய போட்டிகள் நடந்தது. இதுதவிர கிரேடன், கோல்டன் ரீட்ரீவர் மற்றும் டேஸ்அவுண்ட் ஸ்பேசல் ஷோ நடந்தது. இதில் சிறப்பாக செயல்பட்ட நாய்களுக்கு பாிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து இன்றும், நாளையும் அனைத்து ரக நாய்கள் பங்கேற்கும் கண்காட்சி மற்றும் அணிவகுப்பு அவைகளின் திறமைகள் குறித்த போட்டிகள் நடக்கிறது. வெற்றி பெறும் நாய்களுக்கு கேடயங்கள், கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன. இக்கண்காட்சியினை சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் பார்த்து மகிழ்ந்தனர்.

கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் கூறுகையில், ஊட்டியில் துவங்கியுள்ள நாய் கண்காட்சியில் இந்தியா முழுவதிலும் இருந்து 56 வகையான 400 நாய்கள் பங்கேற்றுள்ளன. கீழ்படிதல், அணிவகுப்பு, அவற்றிற்கான தனித்திறமைகள் அடிப்படையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு சான்றிதழ்கள், கேடயங்கள் வழங்கப்பட உள்ளது. இதுதவிர பிலிப்பைன்ஸ்யை சேர்ந்த மரியோ மக்சசாய், தைவானை சேர்ந்த அலெக்ஸ் ஷி, சிங்கப்பூரை சேர்ந்த சுவாமிங் கோக், பேட்ரிக் வாங் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்றனர்.

The post ஊட்டி மலர் கண்காட்சியில் 56 வகையான 400 நாய்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Ooty Flower Show ,Ooty: The 134th Dog Show ,South India Kennel Club ,Ooty ,Ooty flower fair ,Dinakaran ,
× RELATED தேவர் சோலை பேரூராட்சியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு புதிய சாலை திறப்பு