×

ஊட்டி மலர் கண்காட்சி துவக்க நிகழ்ச்சியில் ராணுவ வீரர்களின் ‘பேண்டு வாத்திய’ நிகழ்ச்சி

*சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது

ஊட்டி : ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சியை முன்னிட்டு வெலிங்டன் எம்ஆர்சி ராணுவ வீரர்கள் நிகழ்த்திய ‘பேண்டு வாத்திய’ இசை நிகழ்ச்சி சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. ஊட்டியில் கோடை சீசன் கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வர இ-பாஸ் முறை நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளதால் இ-பாஸ் பெற்று சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் வழக்கமாக வர கூடிய கூட்டத்தை விட சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைந்துள்ளது.

இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் காரணமாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இதனால் காய்கறி கண்காட்சி, வாசனை திரவிய கண்காட்சி, படகு போட்டிகள் உள்ளிட்டவைகள் ரத்து செய்யப்பட்டன. மலர் கண்காட்சி மற்றும் ரோஜா கண்காட்சிக்கு மற்றும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து கோடை விழா நிகழ்ச்சிகளின் முக்கிய நிகழ்ச்சியாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் 126வது மலர் கண்காட்சி நேற்று துவங்கியது. இம்முறை 20ம் தேதி வரை 11 நாட்கள் நடைபெற உள்ளது.

மலர் கண்காட்சியை முன்னிட்டு சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் குன்னூர் வெலிங்டன் எம்.ஆர்.சி., ராணுவ படைபிரிவின் பேண்டு வாத்திய குழு சார்பில் ‘பேண்டு வாத்திய’ இசை நிகழ்ச்சி நடந்தது. இது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. இதனை ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தது மட்டுமில்லாமல் செல்போன்களில் புகைப்படம், வீடியோ எடுத்து மகிழ்ந்தனர். இது தவிர பழங்குடியின மக்களின் கலாச்சார நடனமும், நீலகிரியில் வசிக்கும் படுகர் இன மக்களின் கலாச்சார நடன நிகழ்ச்சிகளும் நடந்தது.

The post ஊட்டி மலர் கண்காட்சி துவக்க நிகழ்ச்சியில் ராணுவ வீரர்களின் ‘பேண்டு வாத்திய’ நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Ooty flower fair ,Ooty ,Vathiya ,Wellington MRC ,Ooty Botanical Garden ,
× RELATED ஊட்டி மலர் கண்காட்சி மேலும் 6 நாள் நீட்டிப்பு