×

மத்திகோடு ஊராட்சியில் தீக்குளிக்கப்போவதாக ஊழியர் மண்ணெண்ணெய் கேனுடன் மிரட்டல்

*சம்பளம் வழங்காததால் ஆத்திரம்

கருங்கல் : அருமனை அருகே பாக்கியபுரம் பகுதியை சேர்ந்தவர் ஏசுரெத்தினம்(53). கருங்கல் அருகே மத்திகோடு ஊராட்சியில் குடிநீர் நிரந்தர பணியாளராக பணியாற்றி வருகிறார். இந்த ஊராட்சி தலைவியாக அதிமுகவை சேர்ந்த அல்போன்சாள் உள்ளார்.கடந்த சில நாட்களாக ஏசுரெத்தினத்தை ஊராட்சி வருகை பதிவேட்டில் கையெழுத்துபோட தலைவி அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதுபோல் அவருக்கு கடந்த மாத சம்பளம் போடாமல் காலம் தாழ்த்தியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலை ஏசுரெத்தினம் பெட்ரோல் ேகனுடன் மத்திகோடு ஊராட்சி அலுவலகத்திற்கு வந்தார். என்னை வருகை பதிவில் கையெழுத்து போட அனுமதிக்கவில்லை. 10ம் தேதி ஆகியும் கடந்த மாத சம்பளம் வழங்கவில்லை. வேண்டும் என்றே இப்படி செய்கின்றனர். அதனால் இன்று சம்பளம் வழங்காவிட்டால் இங்கேயே தீக்குளிப்பேன் என்று கூறி போராட்டம் நடத்தினார்.அப்போது ஊராட்சி பணியாளர் ஒருவர் அவரை வலுக்கட்டாயமாக அலுவலகத்தில் இருந்து வேளியேற்றியதாக கூறப்படுகிறது. இதற்கிடையே சம்பவம் குறித்து அறிந்து சம்பவ இடம் வந்து ஏசு ரெத்தினத்திடம் பேச்சுவார்த்தை நடத்திய கருங்கல் போலீசார், லாவகமாக அவரிடம் இருந்து மண்ணெண்ணெய் கேனை பறித்தனர்.

இதையடுத்து அலுவலகத்திற்கு வெளியே தரையில் அமர்ந்து ஏசுரெத்தினம் போராட்டம் நடத்தினார். நியாயம் கிடைக்காமல் இங்கிருந்து போகமாட்டேன் என்று அவர் தெரிவித்தார். இதையடுத்து ஊராட்சி துணை தலைவர் ஜெனோ ரெனிட்டஸ் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் உயர் அதிகாரிகள் வராமல் போகமாட்டேன் என்று அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே கிள்ளியூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சி நிர்வாகம்) புஷ்பரதிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவர் அங்கு வந்து விசாரணை நடத்தினார். வருகை பதிவேடு புத்தகத்தை ஊராட்சி தலைவர் தனியாக வைத்துள்ளார். பொது இடத்தில் வைக்க வேண்டும் என்று ஏசுரெத்தினம் வலியுறுத்தினார். இதையடுத்து வருகை பதிவேட்டை பொதுவாக வைக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டார்.

ஏசு ரெத்தினம் ஒழுங்காக வேலை செய்வதில்லை. முறையாக தண்ணீர் திறப்பதில்லை. என்று ஊராட்சி நிர்வாகம் ெதரிவித்தது. ஆனால் மோட்டார் பழுதடைந்தால் ஊராட்சி நிர்வாகம் சரி செய்வதில்லை. எப்படி தண்ணீர் வழங்க முடியும் என்று ஏசு ரெத்தினம் கேள்வி எழுப்பினார்.தொடர்ந்து ஏசுரெத்தனத்திற்கு சம்பளம் போடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டத்தை அவர் கைவிட்டார்.

The post மத்திகோடு ஊராட்சியில் தீக்குளிக்கப்போவதாக ஊழியர் மண்ணெண்ணெய் கேனுடன் மிரட்டல் appeared first on Dinakaran.

Tags : Mathikodu panchayat ,Yesurethinam ,Bhakyapuram ,Arumanai ,Mathikodu ,Karungal ,Alphonsal ,AIADMK ,Esureth ,
× RELATED கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில்...