×
Saravana Stores

10ம்வகுப்பு தேர்வில் வீரகனூர் ராகவேந்திரா மெட்ரிக் பள்ளி மாநில அளவில் சிறப்பிடம் பெற்று சாதனை

பெரம்பலூர்,மே11:சேலம் மாவட்டம், தலை வாசல் தாலுகா, வீரகனூர்  ராகவேந்திரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 2023-2024ம் கல்வி ஆண்டிற்கான 10ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மாநில அளவில் சிறப்பிடமும், ஆத்தூர் கல்வி மாவட்ட அளவில் மற்றும் தலைவாசல் தாலுகா அளவில் முதலி டமும் பெற்று மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். 10ம்வகுப்பு அரசு பொதுத் தேர்வில் வீரகனூர்  ராகவேந்திரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் அக்க்ஷிதா, அனுஷ்கா, அர்ச்சனா தேவி, திலகா, மாணவர் சுஜித் ஆகியோர் 500க்கு 497 மதிப்பெண்களைப் பெற்று, மாநில அளவில் சிறப்பிடமும், மாவட்ட, தாலுக்கா அளவில் முதலி டமும் பெற்றனர்.மாணவிகள் ஜெய, அனுஷ்கா ஆகியோர் 495 மதிப்பெண் பெற்று இரண் டாமிடமும், மாணவர்கள் திலிப்குமார், யோக ஆகி யோர் 494 மதிப்பெண் பெற்று மூன்றாமிடமும் பெற்றனர். மேலும் இப் பள்ளியில் 10ம் வகுப்பில் பல்வேறு பாடங்களில் 44 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ள னர்.

10ம் வகுப்பு படித்த 238 மாணவர்களில் 490க்கும் மேல் 22 மாணவர்களும், 480க்கும் மேல் 41 மாணவர்களும், 470க்கும் மேல் 57 மாணவர்களும், 460க்கும் மேல் 82 மாணவர்களும், 450க்கு மேல் 100 மாணவர்களும், 400க்கு மேல் 160 மாணவர்களும் பெற்றுள்ளனர். பள்ளியின் சராசரி மதிப்பெண்களில் கடந்த 13 ஆண்டுகளாக தொடர்ந்து சிறப்பிடம் பெற்று சாதனை படைத்து வருகிறது. மாநில, மாவட்ட, தாலுக்கா அளவில் அதிக மதிப்பெண் பெற்று சிறப் பிடம் பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பள்ளி தலைவர் அருள்குமார், செயலாளர் செல்வராஜ், பொருளாளர் பிரபா ஆகியோர் பொன்னாடை அணிவித்து பரிசு வழங்கிப் பாராட்டினர். நிகழ்ச்சியில் கல்வி ஆலோசகர்கள் லஷ்மி நாராயணன், இளையப்பன், பழனிவேல், கல்விக் குழு இயக்குநர்கள் ராஜா, வேல்முருகன், ராமலிங்கம், தங்கவேல், ராஜேஸ்வரி மற்றும் இயக்குனர்கள், முதல்வர், துணை முதல்வர்,ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

The post 10ம்வகுப்பு தேர்வில் வீரகனூர் ராகவேந்திரா மெட்ரிக் பள்ளி மாநில அளவில் சிறப்பிடம் பெற்று சாதனை appeared first on Dinakaran.

Tags : Matriculation School ,Weerakanur ,Perambalur ,Salem District ,Thalaivasal Taluk ,Raghavendra Matric Higher Secondary School ,Athur Education District ,Dinakaran ,
× RELATED ஆதிபராசக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி...