ஜெயங்கொண்டம், மே11:அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் விசாலாட்சி நகரில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இரவு நேரத்தில் காலாவதியான கோழிக்கு செலுத்தப்படும் மருத்துவ கழிவுகளை பொதுவெளியில் கொட்டி எரிக்கின்றனர் இதனால் சில மருந்துகள் பாட்டிலுடன் எரிந்த நிலையும் மீதமுள்ள மருந்துகள் எரியாத நிலையிலும் கிடந்து புகைமூட்டமாக கிளம்பி பகுதி முழுவதும் கரும்புகையாக துர்நாற்றம் வீசியதால் அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் துர்நாற்றம் பொறுக்க முடியாமலும் நோய் தொற்று பரவும் அபாயம் இருப்பதாக அச்சத்தில் கதவுகள் மற்றும் ஜன்னலை மூடிக்கொண்டு இருந்துள்ளனர் மீண்டும் காலை எழுந்து பார்த்தபோது மேலும் புகையாக தெரிந்து கொண்டிருந்தது.ஆனால் குடியிருப்பு வாசிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகினர்.
மேலும் அதே பகுதியில் ஜெயங்கொண்டம் சுற்று வட்டார பகுதிகளுக்கு கோழி பண்ணைகளுக்கு கொடுப்பதற்காக கோழிக்கு செலுத்தப்படும் ஊசி, மருந்து உபகரணங்கள் உள்ளிட்டவைகள் கொண்ட அலுவலகம் உள்ளதாகவும் ,சுற்றுவட்டார பகுதிகளுக்கு மருந்துகளை சப்ளை செய்து வருவதாகவும் அதில் காலாவதியான மருந்து உள்ளிட்ட ஊசிகளை பொதுவெளியில் போட்டு எரிப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் மருத்துவ கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த உரிய முறைகளை கடைபிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post ஜெயங்கொண்டம் அருகே குடியிருப்பு பகுதியில் காலாவதியான மருத்துவ கழிவு கொளுத்தியதால் பரபரப்பு appeared first on Dinakaran.