×

45 வயது தாயை கழற்றி விட்ட 24 வயது காதலன் வெட்டிக்கொலை: நண்பனுடன் சேர்ந்து 17 வயது மகன் வெறிச்செயல்


திருச்சி: திருச்சியில் 45 வயது தாயை திருமணம் செய்து கழற்றி விட்ட 24 வயது காதலனை, 17 வயது மகன் நண்பர்களுடன் சேர்ந்து வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி இபி ரோடு கருவாட்டுப்பேட்டையை சேர்ந்த மாரிமுத்து மகன் பரணிகுமார் (24). கூலித்தொழிலாளியான இவருக்கு, எ.புதூர் ராமச்சந்திரா நகரை சேர்ந்த ஜோதி (45) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் தகாத உறவாக மாறியது. இதனால் ஜோதி வீட்டுக்கு பரணிகுமார் அடிக்கடி சென்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு சிங்காரத்தோப்பு அருகே ஜோதியை சந்தித்து பரணிகுமார் பேசி கொண்டிருந்தார். அப்போது தான், வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள போவதாக பரணிகுமார் தெரிவித்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த தகவலை தனது மகனான 17 வயது சிறுவனிடம் ஜோதி தெரிவித்தார். இதைகேட்ட சிறுவன், நண்பரான பீமநகர் முறுக்குகார தெருவை சேர்ந்த முகமது தவுபீக்கை (19) அழைத்து கொண்டு இருவரும் பேசிக்கொண்டிருந்த இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் பரணிகுமாரிடம் இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள், கத்தியால் பரணிகுமாரை சரமாரியாக வெட்டினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். தகவலறிந்த கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார், பரணிகுமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக பரணிகுமாரின் சகோதரர் குணசேகரன் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து ஜோதியிடம் விசாரித்து வருகின்றனர்.

தப்பியோடிய அவரது மகன் மற்றும் முகமது தவுபீக்கை தேடி வருகின்றனர். இது குறித்து போலீசார் கூறுகையில், ‘‘ஜோதியும், பரணிகுமாரும் திருமணம் செய்து ெகாண்டதாக தெரிகிறது. இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பரணிகுமார், வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய முடிவெடுத்து அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார். இந்த விஷயம் ஜோதிக்கு தெரிந்ததால் மகனை வரவழைத்து பரணிகுமாரை கொலை செய்ததாக ெதரிவித்தனர்.

The post 45 வயது தாயை கழற்றி விட்ட 24 வயது காதலன் வெட்டிக்கொலை: நண்பனுடன் சேர்ந்து 17 வயது மகன் வெறிச்செயல் appeared first on Dinakaran.

Tags : Trichy ,Marimuthu ,Trichy EP Road Karuvatuppettaya ,
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...