- ஊட்டி
- 126வது மலர் கண்காட்சி
- ஊட்டி அரசு தாவரவியல் தோட்டம்
- அரசின் தலைமைச் செயலாளர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ஷிவ் தாஸ் மீனா
- ரோஜா பூங்கா
- பிரதம செயலாளர்
ஊட்டி: ஊட்டி அரசினர் தாவரவியல் பூங்காவில் 126வது மலர் கண்காட்சி நேற்று துவங்கியது. இதை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா துவக்கி வைத்து பார்வையிட்டார். ரோஜா பூங்காவில், ரோஜா கண்காட்சியினை துவக்கி வைத்தார். பின்னர் மலர் அலங்காரங்களை பார்வையிட்டார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நீலகிரி மாவட்டத்திற்கு வரும் பயணிகள் இ-பாஸ் பெறுவது குறித்த எவ்வித தயக்கமும், அச்சமும் அடைய வேண்டாம். மிகவும் எளிதான முறையில் இ-பாஸ் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தர சுற்றுலா பயணிகளுக்கு எந்தவொரு தடையும் இல்லை.
எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தங்களது செல்போன் வாயிலாககூட இ-பாஸ் பெற்று வருகை தரலாம். வீட்டில் இருந்து புறப்படும்போது கூட இ-பாஸ் விண்ணப்பித்தால் 2 நிமிடத்தில் வந்துவிடும். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா கல்லாறு பகுதியில் இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த சோதனை செய்ய அமைக்கப்பட்டுள்ள சோதனைச்சாவடியில் ஆய்வு செய்து சுற்றுலா பயணிகளிடம் இ-பாஸ் நடைமுறை எளிதாக உள்ளதா? சிக்கல்கள் ஏதும் உள்ளதா? என்பது குறித்தும் கேட்டறிந்தார்.
The post 2 நிமிடத்தில் இ-பாஸ்: ஊட்டியில் தலைமை செயலாளர் பேட்டி appeared first on Dinakaran.