×

புதிய பாரத எழுத்தறிவு திட்ட கணக்கெடுப்பு பணி தொடக்கம்

திருக்கழுக்குன்றம், மே 11: திருக்கழுக்குன்றம் அருகே புதிய பாரத எழுத்தறிவு திட்ட கணக்கெடுப்பு பணி நேற்று முன்தினம் நடந்தது. திருக்கழுக்குன்றம் தாலுகாவிற்குட்பட்ட புலிக்குன்றம் இருளர் குடியிருப்பு பகுதியில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் 2024-25ம் ஆண்டிற்கான கணக்கெடுப்புப் பணி நேற்று நடந்தது. இந்த கணக்கெடுப்பின்போது, இருளர் மக்களிடம் எத்தனை பேர் எழுதப் படிக்க தெரிந்தவர்கள் மற்றும் தெரியாதவர்கள் என்று கேட்டறிந்தனர். மேலும், அரசின் இந்த திட்டத்தை முழுதுமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். மேலும், இத்திட்டத்தில் கல்வி கற்போர் விவரங்கள் சேகரிக்கப்பட்டது. இந்த கணக்கெடுப்பு பணியின்போது திட்டத்தின் தொழில்நுட்ப அலுவலர் ரகுராமன், பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆண்டனி, திருக்கழுக்குன்றம் வட்டார வள மைய மேற்பார்வையாளர் மகேஷ், ஆசிரியர் பயிற்றுனர்கள் பீமுனிஷா பேகம், ஷைனி ஆரோன், புலிக்குன்றம் அரசுப் பள்ளி தலைமையாசிரியை வைஜெயந்தி மாலா மற்றும் புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வலர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

The post புதிய பாரத எழுத்தறிவு திட்ட கணக்கெடுப்பு பணி தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Thirukkalukkunram ,Thirukkalukunram ,Pulikunram Irular ,Thirukkakulkunram ,
× RELATED செருப்பால் ஏன் பாயை மிதித்தாய் என...