×

மூதாட்டி தீக்குளித்து சாவு

ஆறுமுகநேரி, மே 11: ஆத்தூர் அருகே உள்ள மேலாத்தூர் சேனையர் தெற்கு தெருவை சேர்ந்த ராமர் மனைவி சீதாலெட்சுமி (81). இவர் கடந்த சில தினங்களாக உடல் நலக்குறைப்பாட்டாலும், மனநிலை பாதிக்கப்பட்டும் இருந்தார். நேற்று மூதாட்டி சீதாலெட்சுமியின் பேரன் ரணவீரன் வேலைக்கு செல்வதற்கு வெளியே வந்துள்ளார். அப்போது அங்கு வீட்டிற்கு அருகே மூதாட்டி சீதாலெட்சுமி எரிந்த நிலையில் இறந்து கிடந்தார். மேலும் அருகில் மண்ணெண்ணெய் கேன் மற்றும் தீப்பெட்டி கிடந்துள்ளது. இது குறித்து ஆத்தூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவஇடத்திற்கு வந்த போலீசார், மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இச்சம்பவம் குறித்து சீதாலெட்சுமி மகன் இசக்கிமுத்து அளித்த புகாரின் பேரில் எஸ்.ஐ. செல்வக்குமார் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் மாரியப்பன் விசாரித்து வருகிறார்.

The post மூதாட்டி தீக்குளித்து சாவு appeared first on Dinakaran.

Tags : Arumuganeri ,Rama ,Seethaletsumi ,Melathur Senaiyar South Street ,Athur ,Seethalekshumi ,Ranveeran ,
× RELATED ஆறுமுகநேரியில் புகையிலை பொருள் விற்ற கடை உரிமையாளர் கைது