×

அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 95 சதவீதம் தேர்ச்சி

மல்லசமுத்திரம், மே 11: மல்லசமுத்திரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 95 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. இப்பள்ளியில் படித்து தேர்வு எழுதிய 116 மாணவர்களில், 110 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவன் கார்த்திக்கு 481 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடமும், ரிதன்445 மதிப்பெண் பெற்று 2ம் இடமும், லோகேஷ் 439 மதிப்பெண் பெற்று 3ம் இடத்தையும் பிடித்தனர். 17 மாணவர்கள் 400க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், உறுதுணையாக இருந்த ஆசிரியர்களையும், பள்ளியின் தலைமை ஆசிரியர் மாணிக்கம் பாராட்டினார். சாதனை படைத்த மாணவர்களை, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர், பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பாராட்டினர்.

The post அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 95 சதவீதம் தேர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Govt Boys High School ,Mallasamutram ,Mallasamutram Government Boys Higher Secondary School ,Karthi ,Government Boys Higher Secondary School ,Dinakaran ,
× RELATED டெங்கு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு