திருமங்கலம், மே 11: திருமங்கலம் நகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் தினசரி தூய்மை பணியாளர்கள் மூலமாக சுத்திகரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. இவர்கள் வீடுகள், வணிக நிறுவனங்களில் தினசரி சென்று குப்பை கழிவுகளை பெற்று அவற்றை மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக மாற்றி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நகரில் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள இளநீர் கடைகளில் வீணாகும் இளநீர் மட்டைகள் அதாவது கூடுகளை கண்டறிந்து அவற்றை தூய்மை பணியாளர்கள் மூலமாக சேகரித்து நகராட்சிக்கு சொந்தமான நுண்உர கூடபிரிவுக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் இளநீர் மட்டைகள் சுத்திகரிக்கப்பட்டு அவை திருமங்கலம் நகரில் அமைந்துள்ள ரயில்வே ஸ்லீப்பர் கட்டை தயாரிக்கும் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன்படி நேற்று சுமார் 2830 கிலோ இளநீர் மட்டைகள் மினிவேன் மூலமாக ஸ்லீப்பர் கட்டை தயாரிக்கும் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
The post ரயில்வே ஸ்லீப்பர் கட்டை தயாரிக்க 2,830 கிலோ இளநீர் மட்டைகள் திருமங்கலம் நகராட்சி அனுப்பியது appeared first on Dinakaran.