×

ராகுல் டிராவிட் விண்ணப்பிக்கலாம்: ஜெய் ஷா தகவல்

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ள ராகுல் திராவிட் பதவிக் காலம், அடுத்த மாதம் நடைபெற உள்ள டி20 உலக கோப்பையுடன் முடிவுக்கு வருகிறது. இந்நிலையில் அடுத்த 3 ஆண்டுகளுக்கான புதிய தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று பிசிசிஐ செயலர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘டிராவிட் பதவிக் காலம் டி20 உலக கோப்பையுடன் முடிகிறது. புதிய பயிற்சியாளர் பதவிக்கு விரைவில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படும். டிராவிட் விரும்பினால் மீண்டும் விண்ணப்பிக்கலாம். பயிற்சியாளர் பதவிக்கென சில அளவுகோல்களை முடிவு செய்துள்ளோம். தாக்கத்தை (இம்பேக்ட்) ஏற்படுத்தும் வீரர் விதி, சோதனை முயற்சியாக ஐபிஎல் போட்டியில் சேர்க்கப்பட்டது. அதைத் தொடர்வதா, வேண்டாமா என்பது குறித்து பிசிசிஐ ஆலோசனை செய்து வருகிறது. அந்த விதி மூலம் 2 இந்திய வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது’ என்றார்.

The post ராகுல் டிராவிட் விண்ணப்பிக்கலாம்: ஜெய் ஷா தகவல் appeared first on Dinakaran.

Tags : Rahul Dravid ,Jai Shah ,Mumbai ,cricket ,T20 World Cup ,Jay Shah ,Dinakaran ,
× RELATED ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின்...