×

ஜேஇஇ முதன்மை தேர்வில் ஆகாஷ் இன்ஸ்டிடியூட் மாணவர்கள் சாதனை: அட்வான்ஸ் தேர்வுக்கு 13485 பேர் தகுதி

சென்னை: ஜேஇஇ முதன்மை தேர்வில் ஆகாஷ் இன்ஸ்டிடியூட்டில் பயின்ற 13485 பேர் அட்வான்ஸ் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர்.1293 பேர் 99 சதவீத மதிப்பெண்கள் எடுத்து சாதனை புரிந்துள்ளனர். நாட்டின் முன்னணி போட்டி தேர்வுக்கான பயிற்சி மையமாக ஆகாஷ் இன்ஸ்டிடியூட் விளங்குகிறது. இதில், மருத்துவ நுழைவு தேர்வு, ஜேஇஇ உள்பட பல்வேறு போட்டி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக சிறப்பு வாய்ந்த ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் ஜேஇஇ முதன்மை தேர்வு 2024க்கான முடிவுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன.

இதில், ஆகாஷ் இன்ஸ்டிடியூட்டில் பயின்ற மாணவர்கள் சிறப்பாக தேர்வு எழுதி தங்களது திறமைகளை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளனர்.இந்த தேர்வை எழுதிய ஆகாஷ் இன்ஸ்டிடியூட்டை சேர்ந்த 13,485 மாணவர்கள் ஜேஇஇ அட்வான்ஸ் 2024 தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர். மொத்தம் 1293 பேர் 99 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். 9 மாணவர்கள் அகில இந்திய அளவில் டாப் 100 தரவரிசையில் இடம் பிடித்துள்ளனர். 52 மாணவர்கள் டாப் 500 தரவரிசையில் இடம் பிடித்துள்ளனர்.

ஆகாஷின் 4 ஆண்டு வகுப்பறை திட்ட மாணவியான சான்வி ஜெயின் ஒட்டுமொத்தமாக 100 சதவீத மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய தரவரிசையில் 34வது இடமும், பெண்கள் பிரிவில் முதலிடமும் பிடித்துள்ளார். அதே போல் 4 ஆண்டு வகுப்பறை திட்ட மாணவர்களான எம். சாய் திவ்யா தேஜா ரெட்டி மற்றும் ரிஷி சேகர் சுக்லா ஆகியோர் 100 சதவீத மதிப்பெண்களுடன் அகில இந்திய தரவரிசையில் முறையில் 15 மற்றும் 19வது இடத்தை பிடித்துள்ளனர்.இவர்கள் இருவரும் தெலங்கானா மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளனர்.

ரச்சித் அகர்வால் ஒட்டுமொத்தமாக 100 சதவீத மதிப்பெண்களுடன் அகில இந்திய தரவரிசையில் 25வது இடமும் பஞ்சாப்பில் முதலிடமும் பெற்றுள்ளார். ஆகாஷில் பயிற்சி பெற்ற மாணவர்கள் 257 பேர் இயற்பியல், வேதியல் மற்றும் கணிதத்தில் 100 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளனர்.1293 பேர் 99 சதவீத மதிப்பெண்களும், 5841 பேர் 95 சதவீத மதிப்பெண்களுடன் வெற்றி பெற்றுள்ளனர். ஆகாஷ் கல்வி நிறுவன ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் மாணவர்களின் கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியால் இது போன்ற சாதனையை நிகழ்த்த முடிந்தது என்று ஆகாஷ் கல்வி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

The post ஜேஇஇ முதன்மை தேர்வில் ஆகாஷ் இன்ஸ்டிடியூட் மாணவர்கள் சாதனை: அட்வான்ஸ் தேர்வுக்கு 13485 பேர் தகுதி appeared first on Dinakaran.

Tags : Akash Institute ,CHENNAI ,Aakash Institute ,JEE ,Dinakaran ,
× RELATED மாட்டு தொழுவங்களுக்கு இனி லைசென்ஸ் வாங்க வேண்டும்