×

யுடியூபர் சங்கரின் சென்னை வீட்டில் 1 கிலோ கஞ்சா, லேப்டாப் பறிமுதல்

சென்னை: சென்னை மதுரவாயல் எம்எம்டிஏ தமிழ்நாடு குடிசை மாற்றுவாரியக் குடியிருப்பைச் சேர்ந்தவர் சங்கர். இவர் யுடியூப் சேனல் ஒன்று நடத்தி வருகிறார். இவர் தனது யுடியூப் சேனல் மற்றும் பிற யுடியூப் சேனல்களுக்கு நேர்காணல் அளிக்கும் போது, காவல் துறையில் பணியாற்றும் பெண் காலர்கள் குறித்து அவதூறாகப் பேசி இருந்தார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், கடந்த 4ம் தேதி சங்கரை கோவை சைபர் க்ரைம் போலீசார் தேனியில் வைத்து பிடித்தனர். தேனியில் கைது செய்யப்படும் போது, 400 கிராமுக்கு மேல் அவரது காரில் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது கண்ெடடுக்கப்பட்டது. இதுதொடர்பாக தேனி பழனிசெட்டிப்பட்டி போலீசார் சங்கர் உட்பட 3 பேர் மீது கஞ்சா வழக்குப் பதிவு செய்து சங்கரை கடந்த 7ம் தேதி கைது செய்தனர்.

பின்னர் கஞ்சா வழக்கு தொடர்பாக தேனி போலீசார் மதுரையில் உள்ள போதைப்பொருள் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தினர். பொதுவாக போதை பொருள் பதுக்கல் மற்றும் விற்பனை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபரின் சொத்துகள் குறித்து சோதனை நடத்தப்படும். பிறகு நீதிமன்ற உத்தரவுப்படி வழக்கில் தொடர்படைய நபரின் சொத்துகள் மற்றும் வங்கிக் கணக்குகள் முடக்கப்படும். அந்த வகையில், தற்போது நீதிமன்ற உத்தரவுப்படி கஞ்சா வழக்கில் சிக்கிய சங்கரின் சென்னை மதுரவாயில் பகுதி வீடு, தி.நகரில் உள்ள சங்கரின் யுடியூப் சேனல் அலுவலகம் ஆகியவற்றில் நேற்று தேனி போலீசார் அதிரடிச் சோதனை நடத்தினர்.

அப்போது, மதுரவாயல் பகுதியில் உள்ள சங்கரின் வீடு பூட்டப்பட்டிருந்தது. இதனால் தேனி போலீசார் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்து, அவர்களை நேரில் வரவழைத்து அவர்கள் முன்பாக வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் கடந்த 8 ஆண்டுகளுக்கு மேல் கஞ்சா வியாபாரிகளுடன் சங்கர் நெருங்கிய தொடர்பில் இருந்ததற்கான ஆவணம் மற்றும் உயர் ரக கஞ்சா பரிமாற்றம் தொடர்பான முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.மேலும், சங்கர் வீட்டில் அவரது சொந்த தேவைக்காக வைத்திருந்த 1.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

சங்கர் தி.நகர் ராஜா பாதர் தெருவில் நடத்தி வரும் சவுக்கு மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் தேனியில் இருந்து இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையிலான போலீசார் சென்று சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது, அலுவலகத்தில் லேப்டாப் உள்ளிட்ட டிஜிட்டல் ஆவணங்கள், பென்டிரைவ் பறிமுதல் செய்யப்பட்டன. மூத்த பெண் பத்திரிகையாளர் சந்தியா ரவிச்சந்திரன் மற்றும் பெண் காவலர்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்தது தொடர்பாக வீரலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் சென்னை சைபர் க்ரைம் போலீசார் சங்கரை கோவை சிறையில் வைத்து கைது செய்தனர். இதைத்தொடர்ந்து, இந்த இரண்டு வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சென்னை சைபர் க்ரைம் போலீசார் கோவை மத்தியச் சிறையில் இருந்து சாலை மார்க்கமாக நேற்று மாலை சங்கரை சென்னைக்கு அழைத்து வந்து மருத்துவப் பரிசோதனை செய்து அதன் பிறகு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை சிறைக்கு அழைத்து சென்றனர்.

* கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்த அவதூறு வழக்கிலும் கைது
தமிழ்நாடு அரசு சார்பில் புதிதாக திறக்கப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து, சங்கர் சிஎம்டிஏ-வின் ஆவணங்கள் போல் போலியான ஆவணங்களைத் தயாரித்து அதை உண்மை என்பது போல் பொதுமக்களிடையே கட்டமைப்பு வசதிகள் இல்லை. ஊழல் நடந்து இருக்கிறது என்று அண்மையில் அவதூறாகப் பேசி இருந்தார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், ஏற்கனவே 5 வழக்குகளில் கைது செய்யப்பட்ட சங்கரை சைபர் க்ரைம் போலீசார் 6 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 6வது வழக்கிலும் நேற்று கைது செய்தனர். சைபர் க்ரைம் போலீசார் பதிவு செய்துள்ள 3 வழக்குகளிலும் தனித்தனியாக சங்கரை காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். மேலும், சங்கருடன் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பான போலி ஆவணங்கள் தயாரிக்க உதவிய நபர்களையும் கைது செய்ய சைபர் க்ரைம் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

The post யுடியூபர் சங்கரின் சென்னை வீட்டில் 1 கிலோ கஞ்சா, லேப்டாப் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : YouTuber ,Shankar ,Chennai ,Maduravayal MMDA Tamil Nadu Slum ,Housing ,YouTube ,
× RELATED கஞ்சா, பணம் எப்படி வந்தது? யூடியூபர் சங்கர் திடுக் வாக்குமூலம்