சென்னை: பெங்களூருவில் கனமழை பெய்து மோசமான வானிலை நிலவியதால் விமானங்கள் தரையிறங்க முடியாமல் 10 விமானங்கள் சென்னை வந்து தரை இறக்கப்பட்டன. பெங்களூருவில் நேற்று முன்தினம் இரவு சூறைக்காற்று, இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் பெங்களூரு விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. 10 விமானங்கள் தரையிறங்க முடியாமல் சென்னை திருப்பி அனுப்பப்பட்டன. அதன்படி சிங்கப்பூரில் இருந்து பெங்களூரு சென்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மற்றும் டெல்லி, மும்பை, கோவா, ஐதராபாத்,ராஞ்சி, லக்னோ உள்ளிட்ட இடங்களில் இருந்து பெங்களூரு சென்ற 10 விமானங்கள் பெங்களூருவில் தரையிறங்க முடியாமல் சென்னைக்கு வந்து தரையிறங்கின.
சென்னை விமான நிலையத்தில் பயணிகள் அனைவருக்கும் உணவு, குடிநீர் போன்ற வசதிகளை அந்தந்த விமான நிறுவனங்கள் செய்தன. அதன்பின்பு நேற்று அதிகாலை பெங்களூரில் வானிலை சீரடைந்து விட்டது என்ற தகவல் கிடைத்ததை அடுத்து, சென்னையில் இருந்து 10 விமானங்களும் ஒன்றன்பின் ஒன்றாக பெங்களூருக்கு புறப்பட்டுச் சென்றன.
The post பெங்களூருவில் பெய்த கனமழை காரணமாக 10 விமானங்கள் சென்னையில் தரையிறங்கின appeared first on Dinakaran.