×

இமயமலைத் தொடரில் அமைந்துள்ள கேதார்நாத் கோயில் நடை திறப்பு: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

கேதார்நாத்: உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் அமைந்துள்ள கோயிலானது சிவபெருமானின் 12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக வந்து ஈசனைத் தரிசித்துச் செல்கின்றனர். இமயமலைத் தொடரில் மந்தாகினி ஆற்றங்கரையில் அமைந்துள்ள கேதார்நாத் கோயில் குளிர்காலங்களைத் தவிர மீதமுள்ள ஆறு மாதங்கள் மட்டும் கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும்.

அந்த வகையில் இன்று காலை 5 மணிக்கு கேதார்நாத் கோயில் நடை திறக்கப்பட்டது. கேதார்நாத் கோயில் திறக்கப்பட்டதை தொடர்ந்து சிறப்புப் பூஜை வழிபாடுகள் நடந்தன. இந்நிகழ்ச்சியில் உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, அவரது மனைவி கீதா தாமி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். கடந்தாண்டு 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பக்தர்கள் தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post இமயமலைத் தொடரில் அமைந்துள்ள கேதார்நாத் கோயில் நடை திறப்பு: ஏராளமான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Kedarnath Temple ,Kedarnath ,Uttarakhand ,Shivaberuman ,Eisen ,Mandagini River ,
× RELATED பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல்...