புதுடெல்லி: வெளிநாட்டில் பணிபுரியும் வெளிநாடு வாழ் இந்தியர்களிடமிருந்து, இந்தியாவில் வசிக்கும் குடும்பத்தினர், நண்பர்கள் அல்லது உறவினர்களுக்கு செய்யப்படும் பணப் பரிமாற்றத்தை ‘ரெமிட்டன்ஸ்’ என்கின்றனர். அந்த வகையில் அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா போன்ற பல்வேறு நாடுகளில் கிட்டத்தட்ட ஒரு கோடியே 80 லட்சம் இந்தியர்கள் பல்வேறு துறைகளில் பணியாற்றுகிறார்கள்.
அவ்வாறு வெளிநாடுகளில் வசிக்கும் நபர்கள், தங்கள் தாய் நாட்டுக்கு அனுப்பும் பணப்பரிமாற்றம் பற்றியான ஒரு அறிக்கையை ஆண்டுதோறும் ஐ.நா சபை வெளியிடுகிறது. உலக புலம் பெயர்வு அறிக்கை என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள இந்தாண்டுக்கான அறிக்கையில், ‘தரவரிசையில் முதல் 5 இடங்களில் இந்தியா, மெக்சிகோ, சீனா, பிலிப்பைன்ஸ் மற்றும் பிரான்ஸ் இடம் பெற்றிருந்தாலும், மெக்சிகோ, சீனாவை முந்திக் கொண்டு தாய்நாட்டுக்கு அதிக அளவில் பணம் அனுப்பும் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா முன்னேறியுள்ளது.
2010ம் ஆண்டில் 53.48 பில்லியன் டாலர்கள், 2015ம் ஆண்டில் 68.91 பில்லியன் டாலர்கள், 2020ம் ஆண்டில் 83.15 பில்லியன் டாலர்கள், 2022ம் ஆண்டில் 111.22 பில்லியன் டாலர் (ரூ.9.28 லட்சம் கோடி) அனுப்பப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு அடுத்தபடியாக , மெக்ஸிகோ 61.1 பில்லியன் டாலர்களுடன் இரண்டாவது இடத்தையும், சீனா 51 பில்லியன் டாலர்களுடன் மூன்றாவது இடத்தையும், பிலிப்பைன்ஸ் 38.05 பில்லியன் டாலர்களுடன் நான்காவது இடத்தையும், 30.04 பில்லியன் டாலர்களுடன் பிரான்ஸ் ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post வெளிநாடு வாழ் இந்தியர்கள் மூலம் சொந்தங்களுக்கு ரூ.9.28 லட்சம் கோடி அனுப்பி வைப்பு: ஐ.நா அறிக்கையில் தகவல் appeared first on Dinakaran.