×

சோள ரவை உப்புமா

தேவையானவை

அரிசி ரவை – 1 கப்
சோளம் – 1 கப்
கோதுமை ரவை – 1 கப்
பச்சை மிளகாய் – 1
கடுகு – 1 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் – 1
இஞ்சி – சிறிய துண்டு
உளுத்தம் பருப்பு – சிறிதளவு
கடலைப்பருப்பு – சிறிதளவு
பெருங்காயத்தூள் – சிறிதளவு
முந்திரி – தேவையான அளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

சோளத்தை ரவையாக உடைத்துக் கொள்ள வேண்டும். அரிசி ரவை, கோதுமை ரவை, சோள ரவை மூன்றையும் ஒன்று சேர்க்கவும்.கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு தாளித்து, பொடியாக நசுக்கிய இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் ஆகியவற்றைச் சேர்க்கவும்.கலந்து வைத்திருக்கும் ரவையின் அளவில் 1 பங்குக்கு மூன்று பங்கு என்ற விகிதத்தில் தண்ணீர் ஊற்றவும். பிறகு உப்பு சேர்த்து, கொதித்ததும் கலந்து வைத்திருக்கும் ரவையைத் தூவிக் கிளறி, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் போட்டுக் கிளறி இறக்கவும்.பிடித்தமான காய்கறிகளை சேர்த்தும் சோள ரவை உப்புமா தயாரிக்கலாம். விருப்பப்பட்டவர்கள் சட்னியுடன் சாப்பிடலாம்.

 

The post சோள ரவை உப்புமா appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED தீர்க்கசுமங்கலி ஆக்கும் திருமணப் பொருத்தம்!