×

மின்னல் தாக்கி மாணவர் பலி

தென்காசி: தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே குலையநேரி தண்ணீர் கிணற்றுத் தெருவை சேர்ந்த முருகன் மகன் சிவசக்தி (15). இவர் பங்களா சுரண்டையில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று சிவசக்தி பங்களா சுரண்டைக்கு தனது நண்பர்களை பார்ப்பதற்காக சென்றார். அப்போது பலத்த காற்றுடன் மழை பெய்ததாக தெரிகிறது. இதையடுத்து அவர் அருகில் உள்ள மரத்தடியில் ஒதுங்கி நின்றதாக கூறப்படுகிறது.

அப்போது எதிர்பாராத விதமாக‌ மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே மாணவர் சிவசக்தி பரிதாபமாக உயிரிழந்தார். தகவலின் பேரில் சுரண்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சிவசக்தி உடலை கைப்பற்றி தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மின்னல் தாக்கி பள்ளி மாணவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post மின்னல் தாக்கி மாணவர் பலி appeared first on Dinakaran.

Tags : Tenkasi ,Murugan ,Sivashakti ,Kulayaneri ,Surandai, Tenkasi district ,Bangla Surandai ,Dinakaran ,
× RELATED மழை காரணமாக தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு!