×

வாக்கு சதவீதம் குறித்த தரவுகளில் தாமதம் இல்லை; எப்போதும் போல தகவல்கள் வெளியிடப்படுகின்றன : இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம்

டெல்லி :I.N.D.I.A. கூட்டணி தலைவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எழுதிய கடிதத்திற்கு தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. சில தினங்களுக்கு முன்னதாக I.N.D.I.A. கூட்டணி தலைவர்களுக்கு கார்கே எழுதிய கடிதத்தில், “இந்திய தேர்தல் ஆணையத்தின் அணுகுமுறை கவலை அளிக்கிறது. வாக்குப்பதிவு புள்ளி விபரங்கள் அளிப்பதில் காலதாமதம் மற்றும் முரண்பாடுகள் ஏற்படுவதால், தேர்தல்களின் சுதந்திரமான மற்றும் நியாயமான தன்மை குறித்து கடுமையான சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. இது சாதாரண தேர்தல் அல்ல, நமது ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பை நிலைநிறுத்துவதற்கான போராட்டம். தேர்தல் ஆணையத்தை பொறுப்புடன் நடத்துவதற்கும் குரல் எழுப்புவது நமது கூட்டு கடமையாகும்” இவ்வாறு தெரிவித்தார்.

கார்கேவின் இந்த கடிதத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தியில், “வாக்கு சதவீதம் தொடர்பான காங். தலைவர் கார்கேவின் கடிதம் பாரபட்சமானதாக உள்ளது. சுதந்திரமான, நியாயமான தேர்தலை நடத்துவதில் தடைகளை ஏழ்படுத்தும் வகையில் கடிதம் உள்ளது. வாக்கு சதவீதம் குறித்த தரவுகளில் தாமதம் இல்லை; எப்போதும் போல தகவல்கள் வெளியிடப்படுகின்றன.தேர்தல் நேரத்தில் கார்கேவின் கடிதம் வாக்காளர்களுக்கு திர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாம். தேர்தல் நடவடிக்கை முக்கியத்துவத்திற்கு எதிராக மல்லிகார்ஜூன கார்கே செயல்படுகிறார். வாக்குப்பதிவு நடைபெற்று வரும்போது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தெரிவிப்பது குழப்பத்தை ஏற்படுத்தும்,”இவ்வாறு தெரிவித்தார்.

The post வாக்கு சதவீதம் குறித்த தரவுகளில் தாமதம் இல்லை; எப்போதும் போல தகவல்கள் வெளியிடப்படுகின்றன : இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Election Commission of India ,Delhi ,I.N.D.I.A. ,Election Commission ,Congress ,President ,Mallikarjuna Karke ,Karke ,Dinakaran ,
× RELATED விக்கிரவாண்டி இடைத்தேர்தலில்...