கோத்தகிரி : கோத்தகிரி சுற்றுவட்டார பகுதியில் திடீரென பெய்த கோடை மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில வாரங்களாக பகல் நேரங்களில் அதிக அளவில் வெயிலின் தாக்கம் காணப்பட்டு கடும் வறட்சியான சீதோஷ்ண நிலை நிலவி வந்தது. இதனால் நீர்நிலைகள் வறண்டதுடன் காய்கறி பயிர்கள் வாடிய நிலையில் காணப்பட்டு வந்தது.
மேலும் வெயிலின் தாக்கத்தால் கருகிப் போன தேயிலை தோட்டங்கள் பசுமைக்கு திரும்புவதற்கு கோடை மழை பெய்யுமா? என விவசாயிகள் எதிர்பார்த்து இருந்தனர்.இந்த சூழ்நிலையில் நேற்று மதியம் திடீரென கன மழை பெய்ய தொடங்கியது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்ததன் காரணமாக வெயிலின் தாக்கம் குறைந்து, இதமான சீதோஷ்ண காலநிலை நிலவியது. மழையின் காரணமாக காய்கறி மற்றும் தேயிலை தோட்டங்கள் பசுமைக்கு திரும்ப வாய்ப்பு உள்ளது. மேலும் தேயிலை மகசூல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்பதால் மலைக்காய்கறிகள் பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
The post கோத்தகிரியில் கோடை மழை விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.