- அதானி
- அம்பானி
- மோடி
- அமைச்சர்
- சிபிஐ
- பி. சிதம்பரம்
- தில்லி
- மூத்த காங்கிரஸ் தலைவர்
- பி சிதம்பரம்
- வெமுலவாடா
- தெலுங்கானா
டெல்லி : CBI-ன் அமைச்சராக உள்ள பிரதமர் மோடி கடந்த 24 மணி நேரமாக மவுனம் காப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். தெலங்கானாவில் உள்ள வேமுலாவாடாவில் நேற்று நடந்த பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில்,‘‘ திடீரென அதானி மற்றும் அம்பானியை விமர்சிப்பதை ராகுல்காந்தி நிறுத்தி விட்டது ஏன்?. 2 தொழிலதிபர்களிடம் இருந்தும் ராகுல் காந்தி எவ்வளவு பணம் பெற்றார் என்பதை அறிய விரும்புகிறேன். அதானி, அம்பானியிடம் இருந்து டெம்போக்கள் நிறைய கறுப்பு பணம் காங்கிரசுக்கு வந்து சேர்ந்து விட்டதா?.” இவ்வாறு கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த ராகுல் காந்தி, “அதானியும், அம்பானியும் உங்களுக்கு டெம்போவில் பணம் நிரப்பி தருகிறார்களா… இது உங்களின் சொந்த அனுபவமா?. அவர்களுக்கு சி.பி.ஐ, அமலாக்கத்துறையை அனுப்பி விசாரணை மேற்கொள்ளுங்கள், அச்சப்பட வேண்டாம்” என்று சவால் விடுத்திருக்கிறார்.
இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,”பிரதமரின் குற்றச்சாட்டை விசாரிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி கோருவது முற்றிலும் சரியானது. இரண்டு முக்கிய தொழிலதிபர்களிடம் டெம்போ நிரப்பும் அளவு பணம் இருப்பதாகவும், அவை காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்படுவதாகவும் பிரதமர் மோடி மிகத் தீவிரமான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். முடிந்தால் ED, CBI-ஐ ஏவி விசாரணை மேற்கொள்ள உத்தரவிடுங்கள் என ராகுல் காந்தி கூறியிருந்தார்.ஆனால், CBI-ன் அமைச்சராக உள்ள பிரதமர் மோடி கடந்த 24 மணி நேரமாக மவுனம் காக்கிறார். ED-ன் அமைச்சராக உள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் பதிலளிக்கவில்லை. இவர்களின் அமைதி ஆபத்தானது,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.
The post அதானி, அம்பானியிடம் டெம்போவில் கருப்பு பணம் விவகாரம்.. சிபிஐயின் அமைச்சராக உள்ள பிரதமர் மோடி ஏன் மவுனம் காக்கிறார் : ப.சிதம்பரம் விமர்சனம் appeared first on Dinakaran.