- நெமோர்
- பந்தல்கள்
- திமுக
- பவானி
- பவானி வடக்கு ஒன்றிய தி.மு.க
- குருப்பநாயக்கன்பாளையம்
- சந்திரன் சாலை
- பருவாச்சி
- பவானி சேகர்
- தின மலர்
பவானி : கோடை வெயிலில் தவிக்கும் பொதுமக்கள் தாகம் தீர்க்கும் வகையில் பவானி வடக்கு ஒன்றிய திமுக சார்பில் குருப்பநாயக்கன்பாளையம், மூன்ரோடு மற்றும் பருவாச்சியில் நீர்மோர் பந்தல்கள் நேற்று திறக்கப்பட்டது.இந்நிகழ்ச்சிக்கு, பவானி வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் பவானி சேகர் தலைமை தாங்கினார். தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் துரைராஜ், அவைத் தலைவர் தட்சிணாமூர்த்தி, துணைச் செயலாளர்கள் சுரேஷ்குமார், சத்தியமூர்த்தி, அப்பிச்சி, ஒன்றிய கவுன்சிலர்கள் சவிதா சுரேஷ்குமார்,சரோஜா திருமூர்த்தி, மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் தங்கவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் என்.நல்லசிவம் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் அரசு வழக்கறிஞர் விஜயகுமார்,மாவட்டப் பிரதிநிதி தங்கமணி, தலைமைக் கழக பேச்சாளர் பவானி கண்ணன்,மாவட்ட மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர்கள் தனபாக்கியம் முத்துசாமி,கல்பனா, நிர்வாகிகள் கிருஷ்ணன்,ஆரோக்கியசாமி,மகேந்திரன்,கௌதம், ஜெகதீஷ், குமரேசன்,சரவணன்,தண்டபாணி,அசோக்குமார்,விஸ்வநாதன், மூன்ரோடு மகேஸ்வரன்,நல்லசிவம்,பூபதி,அன்னை ரவி,வீரப்பன்,தங்கராஜ்,கோவிந்தராஜ், காந்திநகர் வேலன், பிஎஸ்என்எல் கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
மொடக்குறிச்சி: கொடுமுடி மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட சிவகிரி பேரூர் கழகத்தின் சார்பில் சிவகிரி பஸ் ஸ்டாண்டில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
இதில் தமிழக வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர், தர்பூசணி பழங்கள் உள்ளிட்டவைகளை வழங்கினார்.
நிகழ்ச்சிக்கு கொடுமுடி மேற்கு ஒன்றிய செயலாளர் நடராஜன் தலைமை தாங்கினார்.சிவகிரி பேரூர் கழகச் செயலாளர் கோபால், சிவகிரி பேரூராட்சி தலைவர் பிரதீபா கோபிநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் எம்பி., அந்தியூர் செல்வராஜ்,மாநில நெசவாளர் அணி செயலாளர் எஸ்எல்டி. சச்சிதானந்தம், மாநில கொள்கை பரப்புச் செயலாளர் சந்திரகுமார்,மொடக்குறிச்சி மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன்,மொடக்குறிச்சி தெற்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார், வர்த்தக அணி மாவட்ட அமைப்பாளர் ராஜசேகர்,சிவகிரி பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
கோபி: கோபி தினசரி மார்க்கெட் பகுதியில் நடந்த நிகழ்ச்சிக்கு ஈரோடு வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திருவேங்கடம் தலைமை தாங்கினார். மாநில நெசவாளர் அணி செயலாளர் சிந்துரவிச்சந்திரன்,துணைச்செயலாளர் மணிமாறன்,மாநில விவசாய அணி இணைச்செயலாளர் கள்ளிப்பட்டி மணி, கோபி நகர செயலாளர் என்.ஆர்.நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் என்.நல்லசிவம் நீர்மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர், வெள்ளரிக்காய், தர்பூசணி மற்றும் இளநீர் போன்றவற்றை வழங்கனார்.
நிகழ்ச்சியில் ஈரோடு வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணித்தலைவர் கைலாஷ்குமார், மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர். சுதாகர்,மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சையது நசீர்,பிரகாஷ்,கோபி தெற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பாலசுப்பிரமணியம்,லக்கம்பட்டி நாச்சிமுத்து, குமாரசாமி, ராஜ்குமார், கோபி நகர ஐ.டி.விங் அருண் பிரசாந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மொடக்குறிச்சி: கொடுமுடி மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கொல்லன் கோவில் பேரூர் கழகத்தின் சார்பில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தலை அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர்,தர்பூசணி பழங்கள் உள்ளிட்டவைகளை வழங்கினார்.நிகழ்ச்சிக்கு கொடுமுடி மேற்கு ஒன்றிய செயலாளர் நடராஜன் தலைமை தாங்கினார்.கொல்லன்கோவில் பேரூராட்சி தலைவரும், பேரூர் கழகச் செயலாளருமான சந்திரசேகர் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் எம்பி., அந்தியூர் செல்வராஜ், மாநில நெசவாளர் அணி செயலாளர் எஸ்எல்டி. சச்சிதானந்தம்,மாநில கொள்கை பரப்புச் செயலாளர் சந்திரகுமார், மொடக்குறிச்சி மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன்,மொடக்குறிச்சி தெற்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார், கொல்லன்கோவில் பேரூராட்சி துணைத் தலைவர் கிருஷ்ணகுமார், பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
The post மாவட்டம் முழுவதும் திமுக சார்பில் நீர்மோர் பந்தல்கள் திறப்பு appeared first on Dinakaran.