×
Saravana Stores

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்த விவகாரத்தில் மேலும் ஒருவர் கைது: ஆலை உரிமையாளருக்கு போலீஸ் வலைவீச்சு

சிவகாசி: சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்த விவகாரத்தில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆலை மேற்பார்வையாளர் சுரேஷ்குமார் நள்ளிரவில் கைதான நிலையில், ஆலை ஒப்பந்ததாரர் முத்து கிருஷ்ணன் இன்று காலை கைது செய்யப்பட்டார். தலைமறைவாக உள்ள ஆலை உரிமையாளர் சரவணனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், கீழதிருத்தங்கல் கிராமத்தில் இயங்கிவந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பெண்கள் மற்றும் 3 ஆண்கள் உட்பட 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். வெடி விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10 பேர் இறந்த விவகாரத்தில், பட்டாசு ஆலை மேற்பார்வையாளர் சுரேஷ்குமார் கைது செய்யப்பட்ட நிலையில், பட்டாசு ஆலை உரிமையாளர் சரவணன், ஒப்பந்ததாரர் முத்துகிருஷ்ணனுக்கு போலீசார் வலைவீசி வந்தனர். இந்நிலையில் சிவகாசி அருகே கீழ திருத்தங்கல் பட்டாசு ஆலை வெடி விபத்தில் குத்தகைதாரர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கெனவே ஆலையின் மேலாளர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது குத்தகைதாரர் முத்து கிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக உள்ள ஆலை உரிமையாளர் சரவணனை போலீசார் தேடி வருகின்றனர்.

The post சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்த விவகாரத்தில் மேலும் ஒருவர் கைது: ஆலை உரிமையாளருக்கு போலீஸ் வலைவீச்சு appeared first on Dinakaran.

Tags : Sivakasi fireworks plant explosion ,Sivakasi ,Sivakasi fireworks plant explosion accident ,MUTHU KRISHNAN ,SURESH KUMAR ,Sivakasi Fireworks ,Dinakaran ,
× RELATED சிவகாசியில் உள்ள லாரி பார்சல் சர்வீஸ்...