- ஆசத்திய அரியலூர் மாவட்டம்
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- 10வது பொதுத் தேர்தல் முடிவுகள்
- ஆசத்யா
- அரியலூர் மாவட்டம்
சென்னை : தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. அதன்படி தமிழகத்தில் 91.55% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 88.58%, மாணவிகள் தேர்ச்சி விகிதம் 94.53% என்றுள்ளது. வழக்கம்போல் மாணவர்களைவிட மாணவிகள் தேர்ச்சி விகிதம் 5.95% அதிகமாக உள்ளது. தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் துணை தேர்வு எழுத நாளை முதல் விண்ணப்பிக்கலாம். ஜூலை 2ம் தேதி மறுதேர்வு நடத்த பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. மறுகூட்டல், மறுமதிப்பீடுக்கு வரும் 15ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.
10ம் வகுப்பில் 91.55% தேர்ச்சி
மாணவர்கள் : 3,96,152
மாணவிகள் : 4,22,591
பாட வாரியான தேர்ச்சி சதவிகிதம்
1. தமிழ் மற்றும் இதர மொழிப்பாடம் – 96.85%
2. ஆங்கிலம் – 99.15%
3. கணிதம் – 96.78%
4. அறிவியல் – 96.72%
5. சமூக அறிவியல் – 95.74
பாடவாரியாக 100 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை:
1.தமிழ் – 8
2.ஆங்கிலம் – 415
3. கணிதம் – 20,691
4. அறிவியல் – 5,104
5.சமூக அறிவியல் – 4,428
அரசுப் பள்ளிகளில் 88% தேர்ச்சி
*அரசுப்பள்ளிகள் 87.90%
*அரசு உதவிப் பெறும் பள்ளி 91.77%
*தனியார் பள்ளிகள் 91.43%
*இருபாலர் பள்ளிகள் 91.93%
*பெண்கள் பள்ளிகள் 93.80%
கடந்த ஆண்டைவிட தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு
*2020 :100%
*2021 : 100%
*2022 : 90.07%
*2023 : 91.39%
*2024 : 91.55%
10ம் வகுப்பு தேர்வில் அரியலூர் முதலிடம்
*அரியலூர் 97.31%
*சிவகங்கை 97.02%
*ராமநாதபுரம் 96.36%
*கன்னியாகுமரி 96.24%
*திருச்சி 95.23%
10ம் வகுப்பு தேர்வில் வேலூர் கடைசி இடம்
*வேலூர் : 82.07%
*ராணிப்பேட்டை : 85.48%
*திருவண்ணாமலை : 86.10%
*திருவள்ளூர் : 86.52%
*கள்ளக்குறிச்சி : 86.83%
The post 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளில் முதலிடம் பிடித்து அசத்திய அரியலூர் மாவட்டம் : மறுமதிப்பீடுக்கு 15ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.