- பெரியாகருப்பூர் சாமுண்டேஸ்வரி கோயில் பாதுகாப்பு விழா
- ஜீயபுரம்
- சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில்
- பெரியக்கருப்பூர்
- சாமுண்டேஸ்வரி அம்மன்
- அரியநாச்சி அம்மன்
- பரிவார்
- பெரியாகருப்பூர் சாமுண்டேஸ்வரி கோயில் பாதுகாப்பு விழா
ஜீயபுரம், மே10: ஜீயபுரம் அடுத்த பெரியகருப்பூரில் உள்ள ஏழு கிராமங்களுக்கான சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் காப்பு கட்டு விழா நேற்று நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு சாமுண்டீஸ்வரி அம்மன், அரியநாச்சி அம்மனுக்கும் பரிவார தேவதைகளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து ஏழு கிராம மக்கள் கோயிலில் கூடி காப்பு கட்டும் வைபவம் நடந்தது. 9 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் இவ்விழாவில் பெரியகருப்பூர், சின்னக்கருப்பூர், பிச்சிபுரம், கீழ்பத்து, மேக்குடி, சுபயபுரம், சாணார்பாளையம் உள்ளிட்ட 7 கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
முக்கிய நிகழ்ச்சியாக வரும் 21ம் தேதி இரவு சாமுண்டீஸ்வரி, அரியநாச்சி அம்மன் தனித்தனியே சப்பரத்தேரில் வீதி உலாவும், 22ம் தேதி மேக்குடி கிராமத்தில் சுவாமி எல்லைக்கு செல்லும் வைபவம், 23ம் தேதி அரியநாச்சிக்கு பெரியகருப்பூர் கிராமத்திலும், சாமுண்டீஸ்வரிக்கு சின்னக்கருப்பூரிலும் ஊஞ்சள் வைபவம் நடைபெறுகிறது. 24ம் தேதி வௌ்ளிக்கிழமை மாலை மஞ்சள் நீராட்டு வைபவமும், வான வேடிக்கையும், 25ம் தேதி பிரியாவிடை வைபவத்துடன் விழா நிறைவடைகிறது.
The post பெரியகருப்பூர் சாமுண்டீஸ்வரி கோயில் காப்பு கட்டு விழா appeared first on Dinakaran.