×
Saravana Stores

2 வது நாளாக சாரல் மழை

திருவாரூர், மே 10: திருவாரூர் மாவட்டத்திலும் 105 டிகிரி வரையில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதன் காரணமாக பொது மக்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், தொழிலாளர்கள் குறிப்பாக கட்டிட தொழிலாளர்கள் உட்பட அனைவரும் கடும் துன்பத்திற்கு ஆளாகி வருகின்றனர். அதன்படி, கடந்த 7ந் தேதியும் வெப்ப அலையுடன் கூடிய 104 டிகிரி அளவில் வெயில் சுட்டெரித்ததால் மாவட்டம் முழுவதும் பெரும்பாலான சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்ட நிலையில் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்தது.நேற்று முன்தினம் (8ம் தேதி) காலை திருவாரூர் உட்பட மாவட்டம் முழுவதும் காலை 10 மணியளவில் மேகமூட்டம் ஏற்பட்டு அதன்பின்னர் திருவாரூர் நகர் உட்பட சுற்றுபுற பகுதிகளில் குளிர்ந்த காற்றுடன் கூடிய சாரல் மழை சுமார் அரை மணி நேரம் வரையில் பெய்தது.

இதன்காரணமாக பொது மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இந்நிலையில் நேற்றும் 2வது நாளாக இந்த சாரல் மழையானது காலை 10.30 மணியளவில் துவங்கி அரை மணி நேரம் வரையில் இடியுடன் கூடிய மழையாக பெய்தது. மேலும் இந்த மழையானது முத்துப்பேட்டை தாலுகா தொண்டியக்காடு, இடும்பாவனம், ஜாம்போவனோடை, தில்லைவிளாகம் பகுதிகளிலும் சாரல் மழையாக பெய்ததால் ஓரளவு வெப்பம் குறைந்ததையடுத்து பொது மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

 

The post 2 வது நாளாக சாரல் மழை appeared first on Dinakaran.

Tags : Tiruvarur ,Tiruvarur district ,Charal ,Dinakaran ,
× RELATED திருவாரூர் மாவட்டத்தில்...