×
Saravana Stores

12ம் வகுப்பில் தேர்ச்சிபெறாத, தேர்வுக்கு வராத தனித் தேர்வர்களுக்கு துணைத் தேர்வு

பெரம்பலூர், மே 10: 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத, தேர்வுக்கு வராத தேர்வர்கள் மற்றும் விண் ணப்பிக்கத் தகுதியுள்ள தனித் தேர்வர்களுக்கு துணைத் தேர்வு ஜூன் 24 ஆம் தேதி தொடங்குகிறது. பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவ லர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது : 2024 மார்ச் மாதம் பிளஸ்-2 எனப்படும் பனிரெண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வை பள்ளி மாணவர்களாக எழுதித் தேர்ச்சிபெறாத மாணவர்களுக்கும், தேர்வுக்கு வராத மாணவர்களுக்கும், 12 ம் வகுப்பு துணைத் தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுள்ள தனித்தேர்வர்களுக்கும், வருகிற ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் துணைத்தேர்வு நடைபெற உள்ளது.

இதன்படி ஜூன் 24 ம் தேதி (திங்கட்கிழமை) தமிழ் பாடத்திற்கும், 25ம் தேதி (செவ்வாய்க்கிழமை) ஆங்கில பாடத்திற்கும், 26ம் தேதி (புதன்கிழமை) கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ கெமிஸ்ட்ரி, ஹோம் சயின்ஸ், பொலிடிகல் சயின்ஸ், புள்ளியல், நர்சிங் உள்ளிட்ட பாடங்களுக்கும், 27ம் தேதி (வியாழக்கிழமை) வேதியியல், கணக் குப்பதிவியல், புவியியல் பாடங்களுக்கும், 28ம் தேதி (வெள்ளிக்கிழமை) இயற்பியல், பொருளாதா ரம், கணினி தொழில் நுட்ப வியல், வேலைவாய்ப்புத் திறன் பாடங்களுக்கும் நடைபெறுகிறது. 29ம் தேதி (சனிக்கிழமை) உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், பேசிக் எலக்ட்ரானிக்ஸ், பேசிக் சிவில், பேசிக் ஆட்டோ மொபைல், பேசிக் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பாடங்களுக்கும், டெக்ஸ் டைல் டெக்னாலஜி, ஆபீஸ் மேனேஜ்மென்ட் அண்டு செக்ரட்டரி ஷிப் பாடங்களு க்கும், ஜூலை 1ம் தேதி (திங்கட்கிழமை) கணிதம், விலங்கியல்,வணிகவியல், உயிர் தொழில்நுட்பவியல்,

நியூட்ரிஷியன் அண்ட் டயட்டிஷ், புட் சர்வீஸ் மேனே ஜ்மென்ட், அக்ரிகல்ச்சர் சயின்ஸ், நர்சிங் உள்ளிட்ட பாடங்களுக்கும் தேர்வுகள் நடைபெறுகிறது. காலை 10:15 மணிக்குத் தொடங்கி பகல் 1:15 மணி வரை நடைபெறும் இந்தத் தேர்வுகளுக்கு தேர்வர்கள் காலை 10 மணிக்கு முன்ன தாக தேர்வுஅறைக்குள் ஆஜராகி இருக்க வேண் டும். இணைய தளத்தின் மூலமாகவோ, பள்ளிகள் மூலமாகவோ பதிவிறக்கம் செய்து தரப்பட்ட ஹால் டிக்கெட்கட்டாயம் கொண்டு வரவேண்டும். தேர்வு மையம் குறித்த விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என அந்த அறிவிப்பில் தெரி வித்துள்ளார்.

The post 12ம் வகுப்பில் தேர்ச்சிபெறாத, தேர்வுக்கு வராத தனித் தேர்வர்களுக்கு துணைத் தேர்வு appeared first on Dinakaran.

Tags : Perambalur ,Perambalur District Primary Education ,Dinakaran ,
× RELATED எளம்பலூர் ஊராட்சியை பெரம்பலூர் நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு