- பாலங்குழி துங்கி கொலிக்குண்டு வராய்
- மதுரா
- அரசு
- அருங்காட்சியகம்
- மதுரை
- உலக அருங்காட்சியகங்கள்
- தமிழ் பாரம்பரிய விளையாட்டு
- மதுரை மாவட்ட மியூசியம்
- தமிழ்நாடு அருங்காட்சியகத் துறை
- பாலங்குழி துகாங்கி கொலிகுண்டு வராய்
- தமிழ் பாரம்பரிய
- அரசாங்க அருங்காட்சியகம்
மதுரை, மே 10: மே 18ம் தேதி உலக அருங்காட்சியகங்கள் தினம் கடைபிடிக்கவதை முன்னிட்டு தமிழ்நாடு அரசு அருங்காட்சியகங்கள் துறையின் கீழ் இயங்கும் மதுரை மாவட்ட அருங்காட்சியகத்தில் தமிழர் பாரம்பரிய விளையாட்டுகள் தொடர்பான போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வரும் மே 11ம் தேதி முதல் மே 16ம் தேதி வரை காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை மொத்தம் 6 நாட்கள் இப்போட்டிகள் நடத்தப்படுகிறது. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளான மே 11ல் பல்லாங்குழி, மே 12ம் தேதி தட்டாங்கால், மே 13ம் தேதி தாயம், மே 14ம் தேதி நொண்டி, மே 15ம் தேதி கிட்டிபுல், மே 16ம் தேதி கோலிக்குண்டு நடைபெற உள்ளன. இந்த போட்டியில் பங்கு கொள்ள விரும்புபவர்கள் தங்களது பெயருடன் கூடிய விபரத்தை 97900 33307 எனும் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் போட்டிக்கான வயது வரம்பு கிடையாது.
போட்டிக்கான விதிமுறைகள் போட்டி நடைபெறும் தினத்தன்று வழங்கப்படும். போட்டியில் பங்கு பெற விரும்பும் நபர்கள் அருங்காட்சியக விதிமுறைக்கு உட்பட்டு பெரியவர்கள் ரூ.5, சிறியவர்கள் ரூ.3 வெளிநாட்டவர் ரூ.100 என கட்டணம் வசூலிக்கப்படும். போட்டியில் பங்கு கொள்ளும் நபர்களுக்கு பாராட்டு சான்றிதழும், வெற்றி பெற்ற நபர்களுக்கு பரிசும் வழங்கப்படும். இத்தகவலை மதுரை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் மருதுபாண்டியன் தெரிவித்துள்ளார்.
The post ‘பல்லாங்குழி துவங்கி கோலிக்குண்டு வரை’ மதுரையில் தமிழர் பாரம்பரிய போட்டிகள் நாளை துவக்கம்: அரசு அருங்காட்சியகம் நடத்துகிறது appeared first on Dinakaran.