×

மயிலாப்பூரில் தொடர் குற்றங்களில் ஈடுபட்ட ரவுடி வெள்ளை சரத் உட்பட 3 பேர் கைது

சென்னை, மே 10: மயிலாப்பூர் மற்றும் அபிராமபுரம் பகுதிகளில் கொலை, கொலை முயற்சி, அடிதடி சம்பவங்களில் ஈடுபட்டு வந்த மயிலாப்பூரை சேர்ந்த பிரபல ரவுடியான சரத் (எ) வெள்ளை சரத் (26), அவரது நண்பர் யமஹா ராகுல் (24), பிரவீன் (25) ஆகியோரை அபிராமபுரம் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் 3 ரவுடிகளும் நேற்று முன்தினம் இரவு மயிலாப்பூருக்கு வந்துள்ளதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் நேற்று அதிரடியாக 3 ரவுடிகளையும் மடக்கி படித்து கைது செய்தனர். இதில், வெள்ளை சரத், கடந்த 2020ம் ஆண்டு மயிலாப்பூர் பறக்கும் ரயில் நிலையம் அருகே ஒரு சிறுவனை கொடூரமாக கொலை செய்த குற்றவாளி ஆவார். பல மாதங்களாக போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்த நிலையில் தற்போது 3 ரவுடிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

The post மயிலாப்பூரில் தொடர் குற்றங்களில் ஈடுபட்ட ரவுடி வெள்ளை சரத் உட்பட 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Villiya Sarath ,Mylapore ,Chennai ,Sarath (A) Valli Sarath ,Yamaha Rahul ,Praveen ,Abrampuram ,Villi Sarath ,
× RELATED தமிழக அரசுடன் இணைந்து போதை பொருள்...