×

திருவள்ளூர் அருகே தீ விபத்தில் சவுக்கு தோப்பு எரிந்து நாசம்

திருவள்ளூர், மே 10: சென்னை சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் எஸ்.ஏ.அமுதன்(62). இவருக்கு திருவள்ளூர் அடுத்த புதூர் கிராமத்தில் 8 ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலம் உள்ளது. அதில் 4 ஏக்கரில் உள்ள சவுக்கு தோப்பில் ஒன்றரை வருடமான சவுக்கு செடி வைத்திருந்தார். இதனை புதூர் கிராமத்தைச் சேர்ந்த ஆர்.முரளி என்பவர் கண்காணித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் விவசாய நிலம் அருகே உள்ள ஆற்றங்கரை ஓரத்தில் தீ பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இந்நிலையில் அந்த தீ சவுக்கு தோப்பிலும் பரவியதால் சவுக்கு தோப்பு முழுவதும் தீ பிடித்துக் கொண்டு எரிந்தது. தகவலின் பேரில் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினர். ஆனால் அதற்குள் சவுக்கு தோப்பு முழுவதும் எரிந்து சேதமாகிவிட்டது விட்டது. இதனால் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் இந்த தீ பரவியதற்கான காரணத்தை கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்குமாறு நிலத்தின் உரிமையாளர், கனகம்மாசத்திரம் போலீசில் புகார் கொடுத்தார்.

The post திருவள்ளூர் அருகே தீ விபத்தில் சவுக்கு தோப்பு எரிந்து நாசம் appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Chawku grove ,Thiruvallur ,S.A. Amuthan ,Sethupattu ,Chennai ,Pudur ,
× RELATED லாரியை மேடையாக்கி தடையை மீறி அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்