×

நண்பர் தலையில் கல்லை போட்டு கொல்ல முயன்ற தொழிலாளி

சேலம், மே 10: சேலம் அருகே, தாயை பற்றி தவறாக பேசியதால் ஆத்திரம் அடைந்த தொழிலாளி, நண்பரின் தலையில் கல்லை தூக்கிப்போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் அருகேயுள்ள கொங்கணாபுரத்தைச் சேர்ந்தவர் ரமேஷ்(எ)பொரிக்கார ரமேஷ்(55). ஓட்டல் ஒன்றில் மாஸ்டராக வேலை செய்து வருகிறார். அதே பகுதியில் உள்ள 14வது வார்டை சேர்ந்தவர் சரவணன்(45). டைலரான இவர், தற்போது ஓட்டல் ஒன்றில் வேலை செய்து வருகிறார். ரமேசும், சரவணனும் நண்பர்கள். குடிப்பழக்கம் கொண்ட இவர்கள், ஒழுங்காக வேலைக்கு செல்லாமல் சுற்றி வந்தனர்.

மதுபோதையில் சரவணனின் தாயை பற்றி, ரமேஷ் தவறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் சரவணன் மிகுந்த கோபத்துடன் இருந்து வந்தார். நேற்று முன்தினம், பழைய பஞ்சாயத்து அலுவலகம் செல்லும் பாதையில் உள்ள மாதையன் என்பவரது வீட்டின் வராண்டாவில் ரமேஷ் படுத்துக்கிடந்தார். அங்கு வந்த சரவணன், மது குடித்து விட்டு படுத்துக்கிடந்த ரமேஷ் தலையில் கல்லை எடுத்து போட்டார். இதில் பலத்த காயம் அடைந்த ரமேசை, அங்கிருந்தவர்கள் மீட்டு எடப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து கொலை முயற்சி வழக்கு பதிவு செய்த கொங்கணாபுரம் போலீசார், சரவணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post நண்பர் தலையில் கல்லை போட்டு கொல்ல முயன்ற தொழிலாளி appeared first on Dinakaran.

Tags : Salem ,Ramesh (a) Borikkara Ramesh ,Konganapuram ,
× RELATED லாரி அதிபர் திடீர் மாயம்