மானாமதுரை, மே 10: மானாமதுரையை சுற்றிலும் நேற்று காலையில் இருந்து வெயில் சுட்டெரித்தது. மாங்குளம், குலையனூர், சன்னதி புதுக்குளம் உள்ளிட்ட கிராமங்களில் பிற்பகல் 2 மணிக்கு வானில் கருமேகங்கள் திரண்டன. திடீரென அரை மணி நேரம் பெய்த மழையால் அப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. ஆனால் மானாமதுரை நகர்ப்பகுதிகளான ரயில்வே காலனி முதல் சிப்காட் பகுதியில் மாலை 4 மணி வரை மழை பெய்யாமல் மேக மூட்டமாக காணப்பட்டது.
The post வெப்பம் தணித்த கோடை மழை appeared first on Dinakaran.