கொல்கத்தா: மேற்கு வங்க கவர்னர் ஆனந்தபோஸ் அங்கு பணிபுரியும் ஒப்பந்த பெண் ஊழியரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பான விசாரணைக்கு போலீசார் ராஜ்பவனுக்குள் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் பேசிய ஆளுநர் ஆனந்தபோஸ் அரசியல்வாதிகள், மம்தா பானர்ஜி மற்றும் போலீசார் தவிர்த்து பொதுமக்களுக்கு மட்டும் சிசிடிவி காட்சிகள் போட்டு காண்பிக்கப்படும் என்று கூறியிருந்தார்.
இதன்படி நேற்று காலை ராஜ்பவனில் புகார் கூறப்பட்ட மே 2ம் தேதி வடக்கு பிரதான நுழைவு வாயிலில் இருந்த இரண்டு கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகள் ராஜ்பவனில் திரையிடப்பட்டது. பொதுமக்கள் 100 பேர் மட்டும் இதனை பார்ப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர்.
The post மேற்கு வங்க கவர்னர் மீது பாலியல் புகார்: ராஜ்பவன் சிசிடிவி காட்சிகளை பார்க்க 100 பேருக்கு அனுமதி appeared first on Dinakaran.