×

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் தமிமுன் அன்சாரி சந்திப்பு


சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று முகாம் அலுவலகத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி சந்தித்து பேசினார். அப்போது அக்கட்சி பொதுச்செயலாளர் மௌலானா நாசர், பொருளாளர் ரிபாஹி, இணை பொதுச்செயலாளர் முகமது பாருக் ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் தமிமுன் அன்சாரி அளித்த பேட்டி: திராவிட மாடல் அரசின் தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினேன். அப்போது முதல்வரிடம், டெல்லி செங்கோட்டையுடன் அவர் இருக்கும் வரைகலை செய்யப்பட்ட படத்தை வழங்கினேன்.

அடுத்த பிரதமரை நீங்கள்தான் அடையாளம் காட்டப்போகிறீர்கள் என்பதே இப்படத்தின் விளக்கம் என முதல்வரிடம் கூறினேன். நான் இவ்வாறு கூறியதும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அதை சிரித்துக் கொண்டே பெற்றுக் கொண்டார். 20 நிமிடங்கள் நடைபெற்ற இச்சந்திப்பு மிகுந்த உற்சாகத்துடன் அமைந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

The post முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் தமிமுன் அன்சாரி சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : Tamimun Ansari ,Chief Minister ,M. K. Stalin ,Chennai ,Human Democratic Party ,Tamil Nadu ,M.K.Stalin ,general secretary ,Maulana Nasser ,treasurer ,Ribahi ,Mohammad Farooq ,Tamimun… ,Dinakaran ,
× RELATED இறக்கும் தருவாயிலும் இளம்...