×

ஐபிஎல் போட்டியில் இன்று குஜராத் டைடன்ஸ்-சூப்பர் கிங்ஸ் மோதல்


அகமதாபாத்: ஐபிஎல் டி20 தொடரின் 59வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைடன்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. அகமதாபாத்தில் மோதும் இந்த அணிகள், இதுவரை தலா 11 ஆட்டங்களில் விளையாடி முடித்து உள்ளன. அதில் நடப்பு சாம்பியன் சென்னை 6வெற்றி, 5 தோல்வி என 12 புள்ளிகளுடன் பட்டியலில் 4வது இடத்தை பிடித்துள்ளது. முன்னாள் சாம்பியன் குஜராத் வெற்றி, 7 தோல்விகளுடன் 8 புள்ளிகளை பெற்றுள்ளது. கூடவே புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தாலும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பில் நீடிக்கிறது. அந்த வாய்ப்பு உறுதியாக சுப்மன் கில் தலைமையிலான குஜராத் எஞ்சிய 3 ஆட்டங்களிலும் வெல்ல வேண்டும். சாய் சுதர்சன், சாய் கிஷோர், ஷாருக்கான், விஜய் சங்கர் என தமிழக வீரர்களால் தமிழ் டைடன்ஸ் அணியாக திகழ்கிறது குஜராத். அதனால் குஜராத் மீதான எதிர்பார்ப்பு தமிழக ரசிகர்களிடையே அதிகம் உள்ளது.

அதை அவர்கள் இன்று உள்ளூர் ரசிகர்கள் ஆதரவுடன் சாதிக்கலாம். எனினும் சென்னை உட்பட முதல் 4 இடங்களில் உள்ள அணிகளின் வெற்றித் தோல்விகள் தான், அதன் பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்யும். அதே நேர்த்தில் எம்எஸ்.டோனி, ருதுராஜ் என இரட்டை வழிகாட்டுதலில் விளையாடும் சென்னை ஏறக்குறைய பிளே ஆப் வாய்ப்பை நெருங்கி விட்டது. ராஜஸ்தான் அணியின் திடீர் தோல்விகள் காரணமாக எஞ்சியுள்ள 3 ஆட்டங்களில் 2ல் வென்றாலும் பிளே ஆப் வாய்ப்பு சென்னைக்கு நிச்சயம். பிளே ஆப் கனவில் உள்ள குஜராத், அதற்கு வாய்ப்பு தருமா என்பது இன்று தெரியும்.

நேருக்கு நேர்
* இரு அணிகளும் மோதிய 6 ஆட்டங்களில், தலா 3 ஆட்டங்களில் வெற்றி தோல்விகளை சந்தித்து சம பலத்துடன் உள்ளன.
* இரண்டு அணிகளும் கடைசியாக விளையாடிய 5 ஆட்டங்களில் சென்னை 3-2 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது
* நடப்புத் தொடரில், சென்னையில் நடந்த 7வது லீக் ஆட்டத்தில் சென்னை 63ரன் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தியது.
* அதிகபட்சமாக குஜராத் 214, சென்னை 206ரன் விளாசி இருக்கின்றன. குறைந்த பட்சமாக குஜராத் 143, சென்னை 133 ரன் எடுத்துள்ளன.

The post ஐபிஎல் போட்டியில் இன்று குஜராத் டைடன்ஸ்-சூப்பர் கிங்ஸ் மோதல் appeared first on Dinakaran.

Tags : Gujarat Titans ,Super Kings ,IPL ,AHMEDABAD ,Chennai Super Kings ,IPL T20 ,Chennai ,Dinakaran ,
× RELATED பேட்டிங் பயிற்சியாளர் தினேஷ் கார்த்திக்