சென்னை: ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்காவுக்குள் விளையாடிய 5 வயது சிறுமியை 2 ராட்வீலர் நாய்கள் கடித்ததில் தலையில் படுகாயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு ராஜிவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் ஆயிரம் விளக்கு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்து வருகிறது. நாய்கள் கடித்ததில் ரேபிஸ் நோய் பாதிப்பு ஏற்படாமல் இருக்க தேவையான தடுப்பூசி தொடர்ச்சியாக சிறுமிக்கு செலுத்தப்பட்டு வருகிறது. சிறுமியை காப்பாற்ற முயன்ற தாயையும் நாய்கள் கடித்துக் குதறியதில் அவருக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது தாய் நலமுடன் உள்ளார்.
இந்நிலையில் சிறுமிக்கு பல்வேறு பரிசோதனைக்கு பின் தலையில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய திட்டமிடப்பட்டது. அதன்படி நேற்று மதியம் பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. தற்போது சிறுமியை மருத்துவர்களின் கண்காணிப்பில் வைத்திருக்கின்றனர். இந்த வாரம் முழுவதும் சிகிச்சை அளிக்கப்பட்டு, அடுத்த வாரம் சிறுமி வீடு திரும்புவார் என மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post ராட்வீலர் நாய்கள் கடித்து காயமடைந்த சிறுமிக்கு வெற்றிகரமாக பிளாஸ்டிக் சர்ஜரி appeared first on Dinakaran.