×

முக்கொம்பு கொள்ளிடத்தில் உடைந்த அணைக்கு அருகில் ரூ.7 கோடியில் கான்கிரீட் தளம்: பணிகள் தீவிரம்

ஜீயபுரம்: முக்கொம்பு கொள்ளிடத்தில் உடைந்த அணைக்கு அருகில் ரூ.7 கோடியில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. திருச்சி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமாக முக்கொம்பு உள்ளது. மேட்டூரில் இருந்து அகண்ட காவிரியாக வந்து முக்கொம்புவில் இருந்து காவிரி, கொள்ளிடத்தில் பிரிந்து செல்கிறது. இந்நிலையில் கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக கடந்த 2018 ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி 8 மதகுகள் உடைந்து சேதமடைந்தன.

அதன்பிறகு ரூ.414 கோடி மதிப்பீட்டில் புதிய கொள்ளிடம் கதவணை கட்டுமானப்பணி மேற்கொள்ளப்பட்டு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பயன்பாட்டிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்தார். தற்போது புதிய கதவணை வழியாக தண்ணீர் சீராக செல்லும் வகையில் பழைய கதவணை பகுதியில் உள்ள தற்காலிக தடுப்பை அகற்றி கான்கிரீட் தளம் அமைக்கும் பணி ரூ.7 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.

இந்த பணிகள் அடுத்த மாதம் பாசனத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பதற்கு முன்னதாக முடிவடையும் என நீர்வளத்துறை பொறியாளர்கள் தெரிவித்தனர்.

The post முக்கொம்பு கொள்ளிடத்தில் உடைந்த அணைக்கு அருகில் ரூ.7 கோடியில் கான்கிரீட் தளம்: பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Trikombu Lolydit ,Jiyapuram ,Trihombu Kolydit ,Trickombu ,Trichy district ,Matur ,Trikombu ,Trichombu Kollidit ,Dinakaran ,
× RELATED வாகன ஓட்டிகள் கடும் அவதி ஜீயபுரம்...