×
Saravana Stores

இந்தியாவில் நடந்து வரும் நாடாளுமன்றத் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சியில் அமெரிக்கா :ரஷ்யா குற்றச்சாட்டு

வாஷிங்டன் : அமெரிக்காவில் காலிஸ்தான் பயங்கரவாதி கொலைச் சதியில் இந்தியா பின்புலமாக இருந்ததாக கூறிய அமெரிக்காவின் குற்றச்சாட்டிற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. காலிஸ்தான் பயங்கரவாதியான குர்பத்வந்த் சிங் பன்னுனை நியூயார்க்கில் கொல்ல சதி திட்டம் தீட்டியது தொடர்பாக அமெரிக்கா விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே இந்த கொலை சதியின் பின்னணியில் இந்திய உளவுத்துறை இருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ரஷ்ய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா, இந்தியா மீதான இந்த குற்றச்சாட்டின் மீது இதுவரை அமெரிக்கா எந்தவித ஆதாரத்தையும் வெளியிடவில்லை என்று கூறினார்.

மேலும் இதன் மூலம் இந்தியாவை அவமதிக்கும் செயலில் அமெரிக்கா ஈடுபடுவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் இந்திய தேசம் குறித்த புரிதல் மற்றும் அதன் வரலாறு குறித்து அறியாமல் அமெரிக்கா பேசி வருகிறது என்றும் இப்படி இந்தியாவின் மத சுதந்திரம் சார்ந்து ஆதாரமற்ற வகையில் அமெரிக்கா தொடர்ந்து பேசி வருவதாகவும் கட்டமாக குறிப்பிட்டார். இதனிடையே இந்தியாவில் நடைபெற்று வரும் நாடாளுமன்ற தேர்தலை சீர்குலைக்கும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட முயன்றதாகவும் ரஷ்யா குற்றம் சாட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உள்நாட்டு அளவில் நிலவும் அரசியல் சமநிலையை சீர்குலைக்க அமெரிக்கா முயற்சிப்பதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

The post இந்தியாவில் நடந்து வரும் நாடாளுமன்றத் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சியில் அமெரிக்கா :ரஷ்யா குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : America ,Russia ,India ,Washington ,United States ,Gurpadwant Singh Bannu ,New York ,US ,
× RELATED இந்தியாவின் சிறந்த வங்கியாக எஸ்.பி.ஐ. தேர்வு!!