×

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த 8 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த 8 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். கீழதிருத்தங்கல் கிராமத்தில் இயங்கிவந்த தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 8 பேர் பலியாகினர். வெடி விபத்தில் 3 பெண்கள், 3 ஆண்கள் உட்பட 8 தொழிலாளர்கள் இறந்த செய்தியை கேட்டு வேதனையடைந்தேன். உடனே ஆட்சியரை தொடர்பு கொண்டு மீட்பு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளேன். காயமடைந்த 10-க்கும் மேற்பட்டோருக்கு அனைத்து உயிர்காப்பு சிகிச்சைகளும் அளிக்கப்பதை உறுதி செய்ய ஆணையிட்டுள்ளேன் என்று முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

The post சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த 8 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.D. ,Sivakasi Fireworks Explosion Crash ,K. Stalin ,Chennai ,Chief Minister MLA ,Sivakasi ,Valthiruthangal ,Sivakasi fireworks ,
× RELATED தமிழ்நாடு முதலமைச்சர்...