- சத்யா பிரதா சகு
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- பிரதான தேர்தல் அதிகாரி
- சத்ய பிரதா சச்சு
- சத்யா பிரதா சாஹு
சென்னை: சென்னை தலைமைச்செயலகத்தில் தமிழ்நாடு தலைமைத்தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தலைமையில் வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகள் மற்றும் அதற்கான பயிற்சி தொடர்பாக அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகள் மற்றும் ஊட்டி, ஈரோடு, விழுப்புரம், மதுரை, தென் சென்னை ஆகிய வாக்கு எண்ணிக்கை மையங்களில் கேமராக்கள் பழுது ஏற்பட்டிருந்தது. அவை அனைத்தும் சரி செய்யபட்ட நிலையில், அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசானை மேற்கொண்டு வருகிறார்.
தமிழத்தில் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் 39 வாக்கு எண்ணிக்கை மையங்களில் வாக்கு பதிவு இயந்திரங்கள் ஸ்ட்ராங் ரூமில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இதற்கான கண்காணிப்பு பணிகளில் மத்திய மற்றும் தமிழ்நாடு காவல்துறையினர் 24 மணி நேரமும் ஈடுபட்டுவரக்கூடிய நிலையில் அதிக வெப்பம் மற்றும் சில நுண்கோளாரு பிரச்சனைகளாலும் கேமராக்களில் பழுது ஏற்பட்டுள்ளது.
அதனை சரிசெய்வதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை மையங்களில் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகள் தொடர்பாகவும் பொதுப்பணி மற்றும் மின்சாரத்துறை அதிகாரிகள் பொறுப்புடன் செயல்பட்டு கேமராக்கள் தொடர்ந்து இயங்குவது குறித்தும் உறுதி செய்ய வேண்டும் என ஏற்கனவே தலைமைத்தேர்தல் அதிகாரி உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் தற்போது வாக்கு எண்ணிக்கை ஏற்பாடு, அதற்கான பயிற்சி, கேமராக்கள் தொடர்பாக அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தலைமைத்தேர்தல் அதிகாரி ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
The post வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகள் தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் சத்ய பிரதா சாகு ஆலோசனை appeared first on Dinakaran.