×
Saravana Stores

வாக்கு சதவீதத்தில் குளறுபடி, பிரிவினையைத் தூண்டும் வெறுப்புப் பேச்சுகள் : I.N.D.I.A.கூட்டணி தலைவர்கள் தேர்தல் ஆணையத்தில் முறையீட முடிவு!!

டெல்லி : மக்களவைத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் பற்றிய இறுதி புள்ளி விவரங்களை தொடர்ந்து குளறுபடிகளுடன் அளித்து வரும் தேர்தல் ஆணையத்திடம் அது பற்றி I.N.D.I.A. கூட்டணி தலைவர்கள் நாளை நேரில் சென்று முறையிட உள்ளனர். மக்களவைத் தேர்தல் 3 கட்டமாக நடைபெற்று முடிந்த போதும் அவற்றில் பதிவான மொத்த வாக்குகள் குறித்த இறுதி விவரங்களை முன்னுக்குப்பின் முரணான வகையில் தேர்தல் ஆணையம் வெளியிட்டு வருகிறது. முதற்கட்ட வாக்குகளின் மொத்த சதவீதத்தை 11 நாட்கள் கழித்தும் 2ம் கட்டத்தில் பதிவான வாக்குகளின் மொத்த சதவீதத்தை 4 நாட்கள் கழித்தும் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. பதிவான மொத்த வாக்குகள் பற்றி உடனடியாக தெரிவிக்கும் பிரத்யேக செயலியும் சரியாக வேலை செய்யவில்லை என்றும் புகார் எழுந்தது.

இது பெறுத்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளதாக I.N.D.I.A. கூட்டணி கட்சி தலைவர்களுக்கு காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் மூலம் எழுதி இருந்தார். வாக்களித்தவர்களின் எண்ணிக்கை மற்றும் பதிவான வாக்குகளின் உண்மையான சதவீதத்தை உடனே வெளியிட வலியுறுத்தி I.N.D.I.A. கூட்டணி தலைவர்கள் நாளை மாலை இந்திய தேர்தல் ஆணையத்தில் நேரில் முறையிட உள்ளனர். அத்துடன் மத மோதலை உருவாக்குகின்றன பிரிவினையைத் தூண்டும் வகையில் பேசும் பாஜக தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தும் நாளை இவர்கள் மனு அளிக்க உள்ளனர். கடந்த மார்ச் மாதம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதான போதும் எதிர்க்கட்சி தலைவர்கள் மீது விசாரணை முகமைகள் எடுக்கும் நடவடிக்கைகளை தடுக்கக் கோரி I.N.D.I.A. கூட்டணி தலைவர்கள் நேரில் முறையிட்டது குறிப்பிடத்தக்கது.

The post வாக்கு சதவீதத்தில் குளறுபடி, பிரிவினையைத் தூண்டும் வெறுப்புப் பேச்சுகள் : I.N.D.I.A.கூட்டணி தலைவர்கள் தேர்தல் ஆணையத்தில் முறையீட முடிவு!! appeared first on Dinakaran.

Tags : I.N.D.I.A. Coalition ,Election Commission ,Delhi ,I.N.D.I.A. ,Lok Sabha ,Dinakaran ,
× RELATED புதிதாக பதிவு செய்த கட்சிகளின்...