சென்னை: பத்மநாபபுரம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேலாயுதம் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மாற்றுக் கொள்கைகள் கொண்டவராக வேறுபாடுகளின்றி இருந்தாலும் அனைவரிடமும் பழகும் குணம் கொண்டவர். கலைஞர் மீதும் தன் மீதும் அளவற்ற பாசம் கொண்டு பழகியவர். வேலாயுதம் இல்ல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வாழ்த்திய நினைவுகள் என் நெஞ்சில் நிழலாடுகிறது என முதலமைச்சர் புகழாரம் சூட்டியுள்ளார்.
The post பத்மநாபபுரம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேலாயுதம் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்..!! appeared first on Dinakaran.