×
Saravana Stores

நாய்க்கடிக்கு ஆளாகுபவர்களின் நிலையை, நாய் வளர்ப்பவர்கள் புரிந்து செயல்பட வேண்டும் :மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை : மாடு முட்டுவது, நாய் கடிப்பது என்பது நமது உள்ளூர் பிரச்சினை மட்டும் அல்ல என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “சென்னையில் போக்குவரத்து நெரிசல் உள்ள இடங்களில் நிழற்பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சி பகுதியில் 299 மருத்துவ மேற்பார்வை குழுக்கள் ஓஆர்எஸ் கொடுப்பதற்கு நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 2 ராட்வெய்லர் நாய்கள் கடித்து குதறி படுகாயம் அடைந்த குழந்தையை பார்க்கும் போது வேதனையாக உள்ளது. குழந்தையின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அறுவை சிகிச்சை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குழந்தையின் மருத்துவ சிகிச்சைக்கான செலவு குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.

மதுரைக்கு அப்புறப்படுத்தப்பட்ட ராட்வீலர் நாய்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். நாய்க்கடிக்கு ஆளாகுபவர்களின் நிலையை, நாய் வளர்ப்பவர்கள் புரிந்து செயல்பட வேண்டும். நாய்கள் வளர்க்க உரிமம் கட்டாயம், மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லை. மாடு முட்டுவது, நாய் கடிப்பது என்பது தேசிய அளவிலான பிரச்சினை; தேசிய அளவிலான விவாதம் தேவை. குறிப்பிட்ட சில நாய் இனங்களை இறக்குமதி செய்ய, விற்பனை செய்ய, இனப்பெருக்கம் செய்ய டெல்லி ஐகோர்ட் தடை விதித்தது. டெல்லி உயர்நீதிமன்ற தடைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட உயர்நீதிமன்றங்கள் இடைக்கால தடை விதித்துள்ளன. நாய் உள்ளிட்ட எந்தவொரு விலங்குகளுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க எந்த அதிகாரமும் எங்களுக்கு கிடையாது. நாய் கடித்தால் அதன் உரிமையாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.”இவ்வாறு தெரிவித்தார்.

The post நாய்க்கடிக்கு ஆளாகுபவர்களின் நிலையை, நாய் வளர்ப்பவர்கள் புரிந்து செயல்பட வேண்டும் :மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Municipal Commissioner ,Radhakrishnan ,Chennai ,Municipal Corporation ,Commissioner ,
× RELATED மதுரையில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை: ஆணையர்